»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசன் தனது பிரமாண்டமான படைப்புக்கு விருமாண்டி என பெயர் சூட்டியுள்ளார். இதனை புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார்.

இந்த முன்னாள் சண்டியர் படத்தின் பாடல் கேசட் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. இதற்காக மாபெரும்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசனின் ரசிகர்கள்ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு படையெடுத்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது புதிய படைப்புக்கு சண்டியர் என்று பெயர் சூட்டியபோது புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்பை நடத்த முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.இருப்பினும் சளைக்காத கமல்ஹாசன் படப்பிடிப்பை சென்னையில் வைத்தும், திருவள்ளூர் பகுதி கிராமங்களில்வைத்தும் எடுத்து முடித்துள்ளார்.

இந் நிலையில் படத்தின் பெயரை சொல்லாமல் படு ரகசியம் காத்து வந்த கமல் அதற்கு விருமாண்டி என்று பெயர்சூட்டிவிட்டார்.

இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல். இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகளை சென்னைகேம்பகோலா மைதானத்தில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடுகிறார் கமல். இதற்காக பிரமாண்டவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கேசட்டை ஏவி.எம். சரவணன் வெளியிட இயக்குனர் கே.பாலச்சந்தர் பெற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சியில்பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட திரையுலக முக்கியஸ்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

சண்டியர் என்ற டைட்டிலை விட பல மடங்கு முறுக்கான விருமாண்டி பெயரை கமல்ஹாசன் வைத்துள்ளதாகதிரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

கிருஷ்ணசாமி வரவேற்பு:

கமல்ஹாசன் படத்தின் புதிய பெயர் சூட்டல் குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ணசாமி, கமலின் இந்த அறிவிப்பைவரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இது திரையுலகினரின் மன மாற்றத்துக்குக்கான முன் மாதிரியாக இருக்கும்என்று கருதுகிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil