»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் விருமாண்டி பட பாடல் கேசட் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

சென்னை கிண்டி கேம்பகோலா மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் மேடையே தென் மாவட்ட கிராமியஸ்டைலில் அமைக்கப்பட்டிருந்தது. செம்மண், வைக்கோல் போடப்பட்டு மேடையே ஒரு தொழுவம் போலக்காட்சியளித்தது.

படத்தில் நடித்த இரு பெரும் சைஸ் ஜல்லிக் கட்டு காளைகளான ராஜா, சூர்யா ஆகியவை மாலைகளுடன்மேடையின் இரு புறமும் நிறுத்தப்பட்டிருந்தன. படத்தில் விருமாண்டி பயன்படுத்தும் பழைய அம்பாசிடர் காரும்நிறுத்தப்பட்டிருந்தது.

மேடையின் இரு ஓரத்திலும் விருமாண்டி சாமி சிலைகள் வைக்கப்பட்டு மாலையிடப்பட்டிருந்தன. மேலும்காண்டாமணி எனப்படும் ஆளுயர வெண்கல மணியும் தொங்கவிடப்பட்டிருந்தது.


விழாவைத் தொடக்கமும் வித்தியாசமாகவே இருந்தது. நையாண்டி மேளத்துடன் விழா ஆரம்பிக்க, அடுத்தாககரகாட்டக் குழுவும் வந்து நின்று ஒரு ஆட்டத்தைப் போட விழாவைப் பார்க்க வந்தவர்கள் எழுந்து நின்று ஆடஆரம்பித்தனர்.

மொட்டை போட்டு லேசாக வளர்ந்திருந்த முடியை தொப்பியை வைத்து மறைத்தபடி வந்திருந்தார் கமல்.கருப்புடையில் இருந்த கமல் மேடைக்கு வந்தபோது மேள, தாளங்கள் ஒலித்தன.

பாடல் கேசட்டை ஏவி.எம் சரவணன் வெளியிட அதை இயக்குனர் கே.பாலசந்தர் பெற்றுக் கொண்டார்.

பின்னர் பாலசந்தர் பேசுகையில், தடங்கல்களை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றக் கூடியவர் கமல்ஹாசன். இந்தப்படத்துக்கு ஏற்பட்ட தடங்கல்களை வென்றிருக்கிறார். சண்டியர் என்ற பெயரை விட விருமாண்டி என்ற பெயர்அற்புதமாக உள்ளது. இதனால் தடங்கல் ஏற்படுத்தியவர்களுக்கு கமல் நன்றி சொல்ல வேண்டும்.

நாங்கள் சினிமா எடுக்கிறோம். எது சரி, எது சரியல்ல என்று சொல்ல சென்சார் போர்டு இருக்கிறது. ஆனால்,சமீபகாலமாக ஒரு குரூப் சினிமாவில் அது கூடாது, இது கூடாது என்கிறது. சென்சார் போர்டுக்கு நாங்கள் பதில்சொல்வதா? அல்லது ஊருக்கு ஊர் பதில் சொல்லிக் கொண்டிருப்பதா?

கமல் அவர்களே.. இனி உங்களை நான் இப்படித்தான் அழைக்கப் போகிறேன். உங்களை விட சிறந்த கலைஞன்இந்தியாவில் யாரும் கிடையாது. இதை எந்த மேடையிலும் சொல்ல நான் தயார். நீ தமிழகத்தில் பிறந்தது தான்பெரிய தப்பு. நீ நடிப்பில் கிங் ஆப் கிங்.

விழாவுக்கு வந்திருந்த திரையுலகப் பிரபலங்கள் (படம் நன்றி- தினகரன்)

நீ சிந்திக்கிற அனைத்தையும் இரண்டரை மணி நேர படத்தில் அடக்கிவிட முடியாது. உன் வேகத்துக்கு சினிமா வரமுடியாது. அதனால் உனக்குத் தான் வேகத் தடை போட வேண்டும். வாழ்க கமல்ஹாசன் நாமம்.

இவ்வாறு பாலசந்தர் பேசப் பேச கண் கலங்கினார் கமல். ரசிகர்கள் ஆராவாரம் விண்ணைப் பிளந்தது.

அடுத்து பாலசந்தரின் காலில் விழுந்து ஆசி பெற்ற பின் கமல் பேசியதாவது:

வெள்ளிப் பனித் தலை அய்யா கே.பாலசந்தர் அவர்கள் நான் தவறு செய்யும் போதெல்லாம் பல்லைக் கடிப்பார்.எனக்கு வேகத் தடை வேண்டும் என்றார். வேகத் தடை இல்லாத வீரத்தை நான் பாலசந்தரிடம் இருந்து தான்கற்றேன்.

விருமாண்டி என்பது மதுரைப் பக்கம் வணங்கப்படும் கிராமத்து சாமி. அந்த சாமியின் பின் ஒரு சரித்திரம்இருக்கிறது. அது குறித்த ஆய்வு செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் விருமாண்டி இந்த மண்ணில் பிறந்தமைந்தன்.

இந்த விழாவே இளையராஜா விழா தான். அவர் திறமையைப் போற்றும் விழா. அவர் ஒரு ஜீனியஸ் என்பதைஇந்தப் படத்தின் பாடல்கள் மீண்டும் நிரூபித்துவிட்டன என்றார்.

இதையடுத்து படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டன.

  • விருமாண்டி இந்த மண்ணின் மைந்தன்: கமல்ஹாசன்
  • "விருமாண்டி" ஆன சண்டியர்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil