For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |
  தமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பதில் இப்போது மலையாள நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.மும்பை இறக்குமதிகள் கொஞ்சம் குறைந்துவிட்ட நிலையில் கன்னடத்தில் இருந்து சாயா சிங், ரக்ஷிதா என பலர்வந்தனர்.

  ஆனால், இப்போது கேரள நடிகைகள் தான் அதிகப் படங்களில் நடித்து வருகின்றனர்.

  மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், ஸ்ரீதேவிகா, நந்தனா, பிரணாதி என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துகொண்டுள்ள நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது தவிர விருமாண்டி வெளியானால்இன்னொரு மலையாள நடிகையான அபிராமியும் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.

  தமிழ் டிவிக்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளும் கேரளத்தை சேர்ந்தவர்கள் தான்.

  இப்போதைக்கு மீரா ஜாஸ்மீன் முன்னணியில் இருந்தாலும், விரைவில் அந்த இடத்தை ஆக்கிரமிக்க நவ்யாவும்,ஸ்ரீதேவிகாவும் போட்டியில் இறங்கலாம்.

  நவ்யா நாயர் இப்போது பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதலில் கூத்துப் பட்டறை எனநல்ல தமிழில் இதற்கு பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அது எல்லாமே டிராமா தான் என ஜனரஞ்சகமாகமாறியது. இப்போது இதன் பெயர் அழகியே தீயே என கவிதைத்தனமாக மாறிவிட்டது.

  இதில் பைவ் ஸ்டார் படத்தில் நடித்த பிரசன்னா தான் ஹீரோ. தயாரிப்பாளரான பிரகாஷ் ராஜும் நடிப்பதுதெரிந்தது தான். படப்பிடிப்பு பாண்டிச்சேரி, இலங்கை, கர்நாடகத்தின் மடிகேரி, சிக்மகளூர் ஆகிய இடங்களில்நடந்து முடிந்துவிட்டது. இப்போது பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  நவ்யா நாயர் மிக நன்றாகவே நடிப்பதாக சொல்கிறார்கள். டான்ஸ் ஆட கொஞ்சம் திணறினாலும் நடிப்பால்அதை ஈடு செய்துவிடுகிறாராம். இதனால் தமிழில் முதல் படம் வெளியாவதற்கு முன்பே ஏகப்பட்ட வாய்ப்புக்கள்தேடி வர ஆரம்பித்துள்ளன.

  ஆனால், அழகிய தீயேவை முடித்துவிட்டுத் தான் அடுத்த படத்தில் புக் ஆக வேண்டும் என்ற ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளதால், வாய்ப்புக்களை ஒப்புக் கொண்டதோடு காத்திருக்கிறார். இந்தப் படம் முடிந்தவுடன் தான்அடுத்த படங்களில் நடிக்க ஆரம்பிப்பாராம்.

  கவர்ச்சி காட்டவும் தயாராக உள்ள நவ்யா தமிழில் நிச்சயமாக ஒரு இடத்தைப் பிடிப்பார் என்கிறார்கள்கோடம்பாக்கத்தில்.

  அதே நேரத்தில் மலையாள நடிகர் பிருதிவிராஜ் (பலான படத்தில் நடிக்கும் பிருதிவிராஜ் அல்ல) என்பவருடன்நவ்யாவுக்கு ஒரு இதுவாம். இப்போதைக்கு சான்ஸ்களைப் பிடிப்பதில் ஆவலாக இருப்பதால் காதலை அடக்கியேவைத்திருக்கிறாராம்.

  அதே போல இன்னொரு மலையாள இறக்குமதியான ஸ்ரீதேவிகா நடித்து வரும் ராமகிருஷ்ணா படப்பிடிப்பும்இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. அகத்தியன் இயக்கி வரும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள்தென்காசி பகுதியில் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

  இவரும் நவ்யாவைப் போலவே டான்ஸ் மூவ்மெண்டுகளில் தான் தடுமாறுகிறாராம். மற்றபடி நடிப்பில் சூப்பர்என்கிறார்கள். இவருக்கும் நிறையவே வாய்ப்புக்கள் ஆரம்பித்துள்ளன.

  சிவாஜியின் பேரனுடன் சக்ஸஸ் படத்தில் நடித்த கேரள நடிகையான நந்தனாவுக்கு அந்தப் படம்தோல்வியடைந்ததால் கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டது. ஆனால், இப்போது கையில் இரண்டு படங்களைவைத்துள்ளார்.

  அதே போல விருமாண்டி வெளியானால் கேரள இறக்குமதியான அபிராமிக்கு நிச்சயமாக அடுத்த ரவுண்டுக்கானபிரேக் கிடைக்கும் என்கிறார்கள்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X