»   »  தேவ்ஆனந்த் சுயசரிதை - வெளியிட்டார் கமல்

தேவ்ஆனந்த் சுயசரிதை - வெளியிட்டார் கமல்

Subscribe to Oneindia Tamil


'எவர்கிரீன்' இந்தி நடிகர் தேவ் ஆனந்த் வாழ்க்கை சரிதத்தை கலைஞானி கமல்ஹாசன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

Click here for more images

தமிழில் சிவகுமார் என்றால், இந்தியில் தேவ் ஆனந்த். என்றும் 16 ரேஞ்சுக்கு படு ஸ்மார்ட்டாக இந்த வயதிலும், நிலையிலும் படு அழகாக இருப்பவர் தேவ் ஆனந்த்.

இவரது வாழ்க்கை சரிதம், ரொமான்சிங் வித் லைப் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் சமீபத்தில்தான் பிரதமர் மன்மோகன் சிங்கால் சமீபத்தில் டெல்லியில் வெளியிடப்பட்டது.

பல்வேறு நகரங்களிலும் இந்த நூலை வெளியிட தீர்மானித்தார் தேவ் ஆனந்த். அதன்படி சென்னையிலும் இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது.

கமல்ஹாசன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய தேவ் ஆனந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா ஆகியோருடன் தனக்கு இருந்த நட்பை நினைவு கூர்ந்து பேசினார்.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்பது போல, அந்த நாட்கள் பொன்னாட்கள் என்று கூறி மலரும் நினைவுகளில் மூழ்கிப் போனார் தேவ் ஆனந்த். அதேபோல எம்.ஜி.ஆருக்கும், தனக்குமான நட்பு குறித்தும் சிலாகித்துப் பேசினார் தேவ் ஆனந்த்.

தொடர்ந்து அவர் பேசுகையில், எனது இந்த வாழ்க்கை வரலாற்று நூல், மனித குலத்துக்கான அஞ்சலியாகும். எனது வாழ்க்கை இதில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அதேசமயம், எனது நாட்டைப் பற்றியும், சுதந்திரப் போராட்டம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கலைஞனின் கலர்ஃபுல் மற்றும் சோல்ஃபுல் வாழ்க்கையை விவரிக்கும் நூல் இது என்றார்.

கமல் பேசுகையில், தசாவதாரம் படத்தின் மிக முக்கியமான ஷூட்டிங் இருந்தது. ஆனால் தேவ் சாபுக்காக அதை ரத்து செய்து விட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். தேவ் சாபை அந்த அளவுக்கு மதிக்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங், நடிகையும், எம்.பியுமான ஜெயப்பிரதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தனது நூலை ஜெர்மனி, ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் தேவ் ஆனந்த் வெளியிடுகிறார்.

Read more about: autobiography, devanand, kamal, release

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil