»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் கமல் நடிக்கும் அப்ஹாய் என்ற இந்தித் திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. இதற்காகப் போடப்பட்டிருந்த செட் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகொண்டது. இதனால் உள்ளே வெப்பம் தகதகத்தது.

படத்தில் மொட்டைத் தலை கெட்டப்பில் நடிக்கிறார் கமலஹாசன். இதற்காகப் மேக்கப் போட்டுக் கொண்டு ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நடித்துக்கொண்டிருந்தார் கமல். சென்னை வெய்யில் வேலையைக் காட்ட மொட்டைத்தலை மேக்கப்பிலிருந்து வியர்வை கொட்டியது.

இதைப்பார்த்த படத்தயாரிப்பாளர் எஸ்.தாணு உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்யைே ஏஸியாக்கி விட்டார்.

கமல் (மொட்டைத்தலையின்) மேல் எத்தனை கரிசனம் தாணுவுக்கு!

தமிழ் படம் எடுக்கிறார் தேவகவுடா மகன்

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மகன் தயாரிப்பாளராகிறார். அவர் ஒரு தமிழத் திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

தான் எடுக்கவுள்ள படத்திற்காக 50 இயக்குநர்களிடம் கதை கேட்டு விட்டார் தேவகவுடாவின் மகன். ம்ஹூம். ஒரு கதை கூடப் பிடிக்கவில்லையாம்முன்னாள் பிரதமரின் மகனுக்கு.

இருப்பினும், தான் எடுக்கப்போகும் படத்துக்கு ஹீரோ செலக்ட் பண்ணி விட்டார். ஹீரோவை நாம் பார்க்கலாம். ரசிக்கலாம். (ஆமாங்க, நம்மபிரசாந்த்தான் ஹீரோ)

பிரசாந்த், தயாரிப்பாளரிடம் தான் இதுவரை நடிக்காத வேடங்களில் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். அதிலும் மொட்டைத்தலையுடன் நடிக்க ரொம்பவும்விரும்புகிறாராம் பிரசாந்த்.

அவர் கமலை டார்கெட் பண்ணுகிறாரா? அல்லது அஜித்தை டார்கெட் பண்ணுகிறாரா?

சிட்டிசன் படத்தில் பல வேடங்களில் நடித்து வருகிறார் அஜித்.

உண்மையிலும் வில்லன்கள்

தமிழ்த்திரையுலகில் வில்லனாக நடித்த இருவர், சமீபத்தில் உண்மையிலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

மன்சூர் அலிகானும் நெப்போலியனும்தான் அந்த முன்னாள், இந்நாள் வில்லன்கள்.

சமீபத்தில் மன்சூர் அலிகான் ஆடியோ கேஸட் வெளியிட்டார். அதில் உள்ள பாடல் வரிகள் குறித்து நெப்ஸூம், மன்சூரும் காரசாரமாக விவாதித்துக்கொண்டார்கள்.

பாடல் எழுதப்படுவதற்கு முன்பே, மன்சூர் அலிகானுடன் பேசிய நெப்போலியன், ரொம்பவும் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டாம்என்று கூறினார். நெப்ஸின் புத்திமதியை கண்டு கொள்ளவில்லை மன்சூர்.

பாடல் கேசட் வெளியானவுடன், என்னய்யா இவ்வளவு மட்டமான வார்த்தைகள் இருக்கு என்று மன்சூரிடம், நெப்போலியன் கேட்க இருவருக்கும்இடையே விவாதம் வலுத்திருக்கிறது. இருவருமே கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்தனராம். விவதாம் முற்றி அடிதடி அளவுக்குப் போய்இருக்கிறது.

தற்போது நடிகர் சங்கத்தின் முன் தீர்வுக்குக் காத்திருக்கிறது இவர்களது பிரச்சனை.

எப்படியோ! ஸ்டன்ட் மாஸ்டர் இல்லாமலேயே ஒரு சூப்பர் ஸ்டன்ட் நடந்திருக்கிறது.

சிவாவுக்கும் கவுசல்யாவுக்கும் டும் டும்

தமிழ்த் திரைப்படத்தில் எப்போதும் ஸாரியிலேயே தோன்றும் நடிகை கவுசல்யா காதலில் விழுந்து விட்டார் என்பது லேட் நியூஸ்.

கவுசல்யா, திரைப்பட இயக்குநர் சிவாவைக் காதலிக்கிறாராம். சிவா ஏற்கனவே திருமணமானவர். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா.

ஆனால் கவுஸ், என்னை சிவாவின் குடும்பத்தாருக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவரது மனைவி எனக்கு நல்ல தோழி. அவரது குடும்பத்தை நான்மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அவரைத் திருமணம் செய்து கொள்வது என்பது நடக்காத காரியம் என்கிறார்.

அது சரி புதிய செய்தி என்ன?

சிவாவின் மனைவி, கவுசல்யாவை தனது கணவர் இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்வதற்கு முழு சம்மதம் தந்து விட்டார் என்றும் விரைவில்கவுசல்யா, சிவா திருமணம் நடக்கும் என்று புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கின்றன.

அதுசரி கவுசல்யா இப்போது என்ன செய்கிறார்?

கருமாடி குட்டன் என்ற மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil