»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரஜினியின் மக்கள் இயக்கம் தேவையற்றது என கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

குங்குமம் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

ரஜியினின் இயக்கம் தேவையற்றது என்பது என்னுடைய கருத்து. இதை ரஜினி சொல்றதுக்கு எதிர்ப்பு காட்டுறேன்னு நினைச்சுடக் கூடாது.அவருடைய கருத்துக்கள், அவருடைய ஆத்திகம், அவருடைய சிந்தனைகள் இதில் இருந்தெல்லாம் நான் மாறுபட்டவன். ஆனால், அதுவேற, நட்பு வேற,

ஆனால், நதிகளை இணைக்கும் இந்தப் பிரச்சனையை நடிகர்கள் பேசுறதைவிட அரசியல்வாதிகள் பேசுறதைவிட சயின்டிஸ்டுகள் பேசலாம்.அவங்களுக்குத் தான் இந்த மாதிரி விஷயங்கள் புரியும், தெரியும். விஷயம் தெரிஞ்சவங்க அவங்க தான்.

கங்கையை இணைப்பது அவ்வளவு சாத்தியமான காரியமல்ல. ஒரு பிரமிடை இப்போ கட்டணுமா? தேவையேஇல்லையே.

விந்திய மலையைக் குடைந்து கங்கையை இங்கே கொண்டு வருவது சாத்தியம் தானா? அதைவிட சாத்தியமானவிஷயம் நான் கேட்டுக் கொண்ட வரையில் எம்.எஸ். சுவாமிநாதன், டாக்டர் உதயமூர்த்தி இவர்களிடம் நான்கேட்டுத் தெரிந்து கொண்டது என்னவென்றால்.. தென்னக நதிகளை இணைத்தாலே போதும் என்பது தான்.

அது தவிர கடல் நீரை குடிநீரா மாத்தலாம். அதுக்கு செலவு பண்ணியாகனும். மழை நீரை சேமிக்கலாம். இதைப்பத்தி அரசாங்கம் சொல்லிக்கிட்டே இருக்கு. நம்மோட நீர் வளத்தை அதிகரிக்க சில அடிப்படை வேலைசெய்தாலே போதும் கிரவுண்ட் வாட்டல் லெவல கூட்ட முடியும். இயற்கையை இடைஞ்சல் செய்யாமல் வளத்தைக்கூட்டலாம். ஆறு குளங்களை தூர் வாரினாலே போதும். இதெல்லாம் சாத்தியமான விஷயங்கள்.

திடீர்னு வந்து நதிகளை இணைக்கிறது என்பது எவ்வளவு நல்லது பயக்கும் என்று சொல்ல முடியாது.

விவசாயத்துக்கு நீர் பற்றாக்குறையைப் போக்க இன்னும் 10 இடத்துலே டேம் கட்டணும். மழை நீரை வெட்டியாகடல்ல கலக்க விடாம சேமிச்சாகனும். காவிரி நதியின் போக்கு, வெள்ளப் பெருக்கு என்பது பல ஆயிரம்வருஷங்களாகவே அப்படியே தான் இருக்கு. ஆனால், இப்போ ஜனத்தொகை பெருகிப் போச்சு. அதுக்கு நாமபிராயச்சித்தம் தேடணும்.

ஒரு சினிமா நடிகனுக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கனும்னு பத்திரிக்கைகாரங்க நினைக்கிறதேபெரிய தப்பு. ஏன்னா நாங்கெல்லாம் படிக்காதவங்க. நானும் சரி... ரஜினியும் சரி படிக்காதவங்க.. பள்ளிக்கூடத்தைத் தாண்டி நாங்க வரவேயில்லை.

எங்கிட்ட போயி விஞ்ஞான கேள்விகளை கேட்குறதே தப்பு. நடிக்க வந்தபோது நாங்ளெல்லாம் பெரியநடிகர்களா வரலை.

ஜனநாயக நாட்டில ரஜின் இந்த மாதிரி ஏதாவது ஆரம்பிக்கக் கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன?. யார்வேணும்னாலும் ஆரம்பிக்கலாம். ஆனால், அவரது நோக்கம் அரசியலாகத்தான் இருக்கு.

நானும் இயக்கம் வச்சுருக்கேன். அது நற்பணி இயக்கம். ஆனால், அவரது இயக்கம் வேறு. நான் என் இயக்கம்மூலமா சந்தோஷமா இருக்கேன். நான் செத்த பின்னாலும் என்னை மறந்து இயக்கம் இயங்கிக்கிட்டே இருந்தால்போதும். பிறந்தேன், எனக்கு சிலை வையுங்கன்னு அந்த ஆசையெல்லாம் எனக்கு இல்லை.

அரசியல் என்பது வாய்ப்பு மாத்திரம் அல்ல. அது ஒரு உணர்வும் கூட. அந்த உணர்வு எனக்கோ ரஜினிக்கோஇருப்பதாக நான் நினைக்கவில்லை.

இதை அவரிடமே சொல்லிவிட்டேன். ஆனால், அவர் தனியாக சிந்திக்கக் கூடியவர். அதனால், இதைச்செய்யாதீங்க.. அதைச் செய்யாதீங்கன்னு அவர்கிட்ட வற்புறுத்தி சொல்ல முடியாது.

அது அவரது இஷ்டம்.

இவ்வாறு கமல் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil