»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதிய கீதை படம் தொடர்பாக நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வரும் இந்து முன்னணித் தலைவர்ராம.கோபாலன் இப்போது சண்டியர் படம் தொடர்பாக கமல்ஹாசனுக்கு சாபம் விட்டுள்ளார்.

நாத்திகவாதிகள் கூட்டத்தில் சேர்ந்துள்ள கமல் தொட்டது எதுவும் விளங்காது என்றார் ராம.கோபாலன்.

சண்டியர் படத்தின் மூலம் தேவர்-தலித் ஜாதி மோதலைத் தூண்ட கமல் முயல்வதாக புதிய தமிழகம் கட்சியின்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இந் நிலையில் ராம.கோபாலனும் இதில் சேர்ந்துகொண்டுள்ளார்.

கீதை என்ற பெயர் வரும் வகையில் படத்தின் டைட்டிலை வைத்ததற்காக விஜய்யையை அவன், இவன் என்றுவிமர்சித்திருந்த ராம.கோபாலன், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:

மருதநாயகத்திற்கு ஏற்பட்ட கதி சண்டியருக்கும் ஏற்படலாம். ஏனென்றால் கமலின் ராசி அப்படி உள்ளது. அவர்தொட்டது கரியாகி விடும்.

ஆளவந்தான், பம்மல் கே. சம்பந்தம் ஆகிய படங்களினால் அதன் தயாப்பாளர்கள் பெரும் நஷ்டத்தைசந்தித்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டேன். கமல் நாத்திகவாதிகளின் கூட்டத்தில் சேர்ந்ததுதான் அவரதுபின்னடைவுக்குக் காரணம்.

இப்போது அவர் கம்யூனிஸ்டுகள் மீது குறி வைத்துள்ளது போலத் தெகிறது. எனவே கூடிய விரைவில்அவர்களையும் ஒழித்துக் கட்டாமல் விட மாட்டார். இதற்காக அவரை வாழ்த்துகிறேன் என்றார்.

சண்டியருக்கு மூ.மூ.க. ஆதரவு:

இந் நிலையில் சண்டியர் படத்துக்கு முழு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கப்படும் என மூவேந்தர் முன்னேற்றக் கழகம்அறிவித்துள்ளது.

அக் கட்சியின் தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கமல்ஹாசன் தமிழகத்துக்கு உலகளவில் பெருமை தேடித் தந்த கலைஞன். கலை உணர்வு கொண்ட அந்தக்கலைஞனுக்கு ஜாதி வெறியோ, ஜாதிக் கலவரத்தைத் தூண்ட வேண்டிய எண்ணமே சிறிதளவும் கியையாது.

அவரது சண்டியர் படத்தை தென் மாவட்டங்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என டாக்டர் கிருஷ்ணசாமிகூறுவது தான் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் உள்ளது. திரைப்பட கலைஞர்களை மிரட்டுவது அவர்களின்சுதந்திரத்தில் தலையிடும் செயல்.

தனது மக்களிடமே செல்வாக்கு இழந்துவிட்ட கிருஷ்ணசாமி அதைத் திரும்பப் பெற வன்முறைத் திட்டத்தை கையில்எடுத்துள்ளார். அவரது மிரட்டலை மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தடுக்கும். சணடியர் படத்துக்கு தென்மாவட்டங்களில் நாங்கள் முழு ஆதரவும் வேண்டிய பாதுகாப்பையும் அளிப்போம்.

இவ்வாறு சேதுராமன் கூறியுள்ளார்.

  • சண்டியரை எதிர்க்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி
  • வன்முறையை தூண்ட படம் எடுக்கவில்லை: கிருஷ்ணசாமிக்கு கமல் பதில்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil