»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தடைகளைத் தாண்டி, வதந்திகளைத் தாண்டி மும்பை எக்ஸ்பிரஸ் திட்டமிட்ட நேரத்தில், குறித்த நாளில் கண்டிப்பாக வெளியாகும்என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

வழக்கமாக கமலின் படம் என்றால் அது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் தான் அதிசயம். சண்டியர் எடுத்தார்.அவருக்கு வில்லனாக வந்தார் கிருஷ்ணசாமி. பெயரை மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

முதலில் முடியாது என்று சண்டியர் போலவே மல்லுக்கட்டி பார்த்தார்.ஜெயலலிதாவிடமும் போய் பாதுகாப்பு கேட்டுப் பார்த்தார்.ஆனால் கிடைக்காமல் போகவே வேறு வழியில்லாமல் சண்டியர், விருமாண்டியானார்.

அதற்கு அடுத்து வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். எடுத்தார். இந்தப் படத்திற்கு டாக்டர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. ஆனால் இந்தப்பிரச்சினையை கமல் எப்படியோ சமாளித்து விட்டார்.

இப்போது அவர் தயாரித்து வரும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று கருதப்பட்டது. ஆனால்இந்தப் படத்திற்கும் இப்போது பிரச்சினை வந்து விட்டது.

தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்கள் சூட்டக்கூடாது என்று திருமாவளவன் மற்றும் டாக்டர் ராமதாஸ் தலைமையிலானதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் போராடி வருகிறது. இவர்களது எச்சரிக்கை காரணமாக சேரன், இயக்குனர் சூர்யா உட்பட பலர்தங்களது படங்களின் ஆங்கிலப் பெயர்களை மாற்றிவிட்டனர்.

இதே போல கமலும் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர் கூறினர்.ஆனால் கமல் இதற்கு முடியாது என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், கமல் வருகிற 24ம் தேதிக்குள் தனது படத்தின் பெயரை மாற்றாவிட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை அன்றையதினம் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் கூறினார்.

இதனால் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகாது என்று செய்திகள் உலவி வருகின்றன. இதைகமல்ஹாசன் மறுத்துள்ளார். திட்டமிட்டபடி ஏப்ரல் 14ம் தேதியன்று மும்பை எக்ஸ்பிரஸ் வெளியாகும் என்று அவர் இன்றுஉறுதியாக கூறினார்.

சென்னையில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பை எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14ம் தேதிவெளியாகாது என்று சிலர் வதந்தியை பரப்பி வருகிறார்கள். வதந்தி பரப்புபவர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. அவர்கள்மகேசனை நம்பட்டும், நான் மக்களின் தீர்ப்பை நம்புபவன்.

தடைகளைத் தாண்டி, புரளியாளர்களின் வதந்திகளை மீறி, மும்பை எக்ஸ்பிரஸ் திட்டமிட்ட நாளில், திட்டமிட்டபடி வெளியாகும்என்றார் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil