twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் சிறந்த நடிகன் கிடையாது: கமல் நான் ஒரு சிறந்த நடிகன் என்று ஒருபோதும் கூறியது கிடையாது என்கிறார் கமலஹாசன்.பல வருடங்களுக்குப் பிறகு இந்த தமிழ்ப்புத்தாண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக உற்சாகமாக அமைந்துள்ளது. இதற்குக்காரணம் சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமலின் படங்கள் இப்போது ஒன்றாக மோதியுள்ளது தான்.ரஜினியின் "சந்திரமுகியும் கமலின் "மும்பை எக்ஸ்பிரசும் அவர்களது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோதாதென்று விஜய்யின் "சச்சினும் களத்தில் குதித்துள்ளது.இதுவரை இல்லாத அளவிற்கு பல இடங்களில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை, பெங்களூரில் சிலதியேட்டர்களில் ரூ.500க்கு கூட டிக்கெட் விற்பனையாகி உள்ளது. ஆனால் ரசிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்தியேட்டர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.ரஜினி, கமல், விஜய் ஆகிய 3 பேரின் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.கமல் வழக்கம் போல தனது மும்பை எக்ஸ்பிரசிலும் பல புதுமைகளை புகுத்தியுள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாகஇந்தப் படம் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.இது அனைவரையும் கவர்ந்துள்ளது.கமலுக்கு காமெடி இயல்பாகவே வரும். இந்தப் படத்தில் அவரது முந்தைய படங்களான தெனாலி, பஞ்சதந்திரத்தை விட காமெடிமிகவும் நன்றாக வந்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.ஆனால் காமெடி படங்கள் எடுக்கத் தான் மிகவும் கஷ்டம் என்கிறார் கமல். இனி அவர் கூறுவதை கொஞ்சம் கேட்போமா?நான் அடுத்தடுத்து காமெடிப் படங்கள் எடுப்பதால் அது ரொம்ப ஈஸி என்று சிலர் கருதுகிறார்கள். உண்மையில் காமெடிப்படங்கள் எடுப்பது தான் ரொம்பக் கஷ்டம்.எனது மும்பை எக்ஸ்பிரஸ் அனைத்து வயதினருக்கும் ஏற்ற படம். மனிஷா கொய்ராலா வேடத்துக்கு முதலில் பிபாஷாபாசுவையும் பின்னர் தபுவையும் அணுகியது உண்மை தான். ஆனால் பிபாஷாவுக்கு அம்மா வேடம் செய்வதற்கு விருப்பம்இல்லை.தபு அதிக சம்பளம் கேட்டார். இதனால் இருவருமே வேண்டாம் என்று முடிவு செய்து மனிஷா கொய்ராலாவை தேர்வு செய்தோம்.ரசிகர்களின் கைதட்டலும், ஆரவாரமும் தான் என்னை தொடர்ந்து படங்கள் செய்ய தூண்டுகிறது. தியேட்டரில் விழும்கைதட்டலை கேட்பதில் ஒரு தனி த்ரில் உள்ளது."அன்பே சிவத்திலும், "ஹே ராமிலும் நான் என்னுடைய மற்ற படங்களை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல "ஆளவந்தானில் எனது நடிப்பு மிகவும் மோசமாக இருந்திருக்கலாம்.என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அடுத்தவர்கள் பேசுவதை நான் விரும்பவில்லை. செக்ஸையும், மதத்தையும் பற்றிபொது இடங்களில் பேசக்கூடாது. சரிகாவும் நானும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்காவிட்டாலும் பிரிந்து தான் இப்போதுவாழ்கிறோம்.என்னுடைய வாழ்க்கையில் கடந்த இரண்டு வருடங்கள் மிகவும் வலி நிறைந்ததாக அமைந்து விட்டது. அந்த வலியிலிருந்துமீண்டு வர நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.நான் தான் சிறந்த நடிகன் என்று ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால் என்னை ஒரு சிறந்த ரசிகன் என்று என்னால் மிகதைரியமாக கூறமுடியும்.கட்டுப்பாடான விமர்சனங்களை நான் எப்போதும் திறந்த மனதுடனேயே ஏற்றுக் கொள்வேன். ஸ்டார் இமேஜைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது என்கிறார் கமல்.

    By Staff
    |
    நான் ஒரு சிறந்த நடிகன் என்று ஒருபோதும் கூறியது கிடையாது என்கிறார் கமலஹாசன்.

    பல வருடங்களுக்குப் பிறகு இந்த தமிழ்ப்புத்தாண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக உற்சாகமாக அமைந்துள்ளது. இதற்குக்காரணம் சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமலின் படங்கள் இப்போது ஒன்றாக மோதியுள்ளது தான்.

    ரஜினியின் "சந்திரமுகியும் கமலின் "மும்பை எக்ஸ்பிரசும் அவர்களது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோதாதென்று விஜய்யின் "சச்சினும் களத்தில் குதித்துள்ளது.

    இதுவரை இல்லாத அளவிற்கு பல இடங்களில் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னை, பெங்களூரில் சிலதியேட்டர்களில் ரூ.500க்கு கூட டிக்கெட் விற்பனையாகி உள்ளது. ஆனால் ரசிகர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்தியேட்டர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    ரஜினி, கமல், விஜய் ஆகிய 3 பேரின் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    கமல் வழக்கம் போல தனது மும்பை எக்ஸ்பிரசிலும் பல புதுமைகளை புகுத்தியுள்ளார். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாகஇந்தப் படம் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

    கமலுக்கு காமெடி இயல்பாகவே வரும். இந்தப் படத்தில் அவரது முந்தைய படங்களான தெனாலி, பஞ்சதந்திரத்தை விட காமெடிமிகவும் நன்றாக வந்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

    ஆனால் காமெடி படங்கள் எடுக்கத் தான் மிகவும் கஷ்டம் என்கிறார் கமல். இனி அவர் கூறுவதை கொஞ்சம் கேட்போமா?

    நான் அடுத்தடுத்து காமெடிப் படங்கள் எடுப்பதால் அது ரொம்ப ஈஸி என்று சிலர் கருதுகிறார்கள். உண்மையில் காமெடிப்படங்கள் எடுப்பது தான் ரொம்பக் கஷ்டம்.

    எனது மும்பை எக்ஸ்பிரஸ் அனைத்து வயதினருக்கும் ஏற்ற படம். மனிஷா கொய்ராலா வேடத்துக்கு முதலில் பிபாஷாபாசுவையும் பின்னர் தபுவையும் அணுகியது உண்மை தான். ஆனால் பிபாஷாவுக்கு அம்மா வேடம் செய்வதற்கு விருப்பம்இல்லை.

    தபு அதிக சம்பளம் கேட்டார். இதனால் இருவருமே வேண்டாம் என்று முடிவு செய்து மனிஷா கொய்ராலாவை தேர்வு செய்தோம்.

    ரசிகர்களின் கைதட்டலும், ஆரவாரமும் தான் என்னை தொடர்ந்து படங்கள் செய்ய தூண்டுகிறது. தியேட்டரில் விழும்கைதட்டலை கேட்பதில் ஒரு தனி த்ரில் உள்ளது.

    "அன்பே சிவத்திலும், "ஹே ராமிலும் நான் என்னுடைய மற்ற படங்களை விட சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல "ஆளவந்தானில் எனது நடிப்பு மிகவும் மோசமாக இருந்திருக்கலாம்.

    என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அடுத்தவர்கள் பேசுவதை நான் விரும்பவில்லை. செக்ஸையும், மதத்தையும் பற்றிபொது இடங்களில் பேசக்கூடாது. சரிகாவும் நானும் சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்காவிட்டாலும் பிரிந்து தான் இப்போதுவாழ்கிறோம்.

    என்னுடைய வாழ்க்கையில் கடந்த இரண்டு வருடங்கள் மிகவும் வலி நிறைந்ததாக அமைந்து விட்டது. அந்த வலியிலிருந்துமீண்டு வர நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

    நான் தான் சிறந்த நடிகன் என்று ஒரு போதும் சொன்னதில்லை. ஆனால் என்னை ஒரு சிறந்த ரசிகன் என்று என்னால் மிகதைரியமாக கூறமுடியும்.

    கட்டுப்பாடான விமர்சனங்களை நான் எப்போதும் திறந்த மனதுடனேயே ஏற்றுக் கொள்வேன். ஸ்டார் இமேஜைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது என்கிறார் கமல்.

    Read more about: good actor kamal
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X