»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மும்பை எக்ஸ்பிரஸ் படம் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். இதில் பிலிம்ரோலுக்குவேலையை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க மும்பை செட்போட்டும், ரயிலிலும் படப்பிடிப்பை நடத்தி வந்த கமல் படத்தின் கதை குறித்து ஆழ்ந்த ரகசியம் காத்து வந்தார்.படத்தில் அவரது ரோல் என்ன என்பது குறித்து இதுவரை தகவலே வெளியில் லீக் ஆகிவிடாத மாதிரி பார்த்துக் கொண்டார்.

இந் நிலையில் இப்போது தான் சர்க்கசில் மரணக் கிணற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவராக கமல் நடிப்பதாக தகவல் கசிகிறது.கிணற்றுக்குள்ளும் பெரிய இரும்புக் கூண்டுக்குள்ளும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் சாகஸக்காரரார் வேடமாம் கமலுக்கு.

இதற்காகவே சிறப்பாக மாடல் செய்யப்பட்ட ஒரு என்பீல்ட் பைக்கை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் கமல். அதன்விலையே பல லட்சங்களாம். சர்க்கஸ் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரையும் மரணக் கிணறு பைக் ஓட்டும் நபரையும் வைத்துக் கொண்டு தினமும்பல மணி நேரம் பயிற்சி எடுத்து இதை ஓட்டியுள்ளார் கமல்.

பயிற்சியின்போதும் சூட்டிங்கின்போதும் கமலுக்கு அவ்வப்போது அடிகள், சிராய்ப்புகளாம்.

இந் நிலையில் டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பம் குறித்த விளக்கக் கூட்டம் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் கமல்ஹாசனும்கலந்து கொண்டார்.

அதில் கமல் பேசுகையில், மும்பை எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் தான் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக நான்திரைப்படச் சுருளை முழுமையாக நிராகத்து விட்டதாக கூற முடியாது. டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியில்லாத திரையரங்குகளில் சுருளில்படம் காட்டப்படும். (இதற்காக தனியாக பிலிம் ரோலிலும் பிரிண்ட் போடப்படவுள்ளது).

டிஜிட்டலில் பல வசதிகள், செளகரியங்கள், நன்மைகள். திரைச் சுருளில் ஏற்படும் கீறல்கள் (அதாவது மழை விழுவது போன்ற) ஏற்படாது,முதல் காட்சி முதல் கடைசிக் காட்சி வரை ஒரே வண்ணத்தில் படத்தைப் பார்க்கலாம்.

தியேட்டரில் எந்தக் காட்சியையும் இடையில் கட் செய்ய முடியாது. சில திரையரங்குகளில் ஆபரேட்டர்களே சென்சார் அதிகாரிகளாக மாறிபல காட்சிகளை வெட்டித் தள்ளுவார்கள். அந்த வேலை டிஜிட்டலிடம் எடுபடாது.

அமெரிக்காவில் 35 திரையரங்குகளில்தான் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதி உள்ளது. ஆனால் நமது நாட்டில் 125 திரையரங்குகளில்உள்ளது. சினிமாவில் நாம் நன்றாகவே முன்னேறியிருக்கிறோம்.

மும்பை எக்ஸ்பிரஸ் ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. ஏப்ரலில் படம் திரைக்கு வருகிறது. இதற்கான இசைக் கோர்ப்புப் பணிகளைஇளையராஜா தொடங்கவுள்ளார். ஒரே வாரத்தில் கம்போஸிங்கை முடிக்கவுள்ளார் என்றார் கமல்.

இந்தப் படத்துக்காக இளையராஜாவுக்கு வழக்கமாகத் தரும் சம்பளத்தைவிட ரூ. 10 லட்சம் அதிகமாகவே தந்திருக்கிறார் கமல்.

மும்பை எக்ஸ்பிரஸைத் தொடர்ந்து காக்க.. காக்க இயக்கிய கெளதம் டைரக்சனில் ஒரு படத்தில் கமல் நடிக்கப் போகிறார். இதில் கமலுக்குமூன்று வேடங்கள் என்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil