»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலா இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சமீபத்தில் இருவரும் சந்தித்துப்பேசியுள்ளனர்.

இப்போதுள்ள இயக்குநர்களில் மணிரத்னம், பாலுமகேந்திராவுக்கு அடுத்து தரமான இயக்குநர் என்றுபேசப்படுபவர் இயக்குநர் பாலா.

பிதாமகன் படத்துக்குப் பிறகு அடுத்த படம் பற்றி இதுவரை மூச்சு விடாமல்இருந்தார்.

இதற்கிடையே சூர்யாதான் பாலாவின் அடுத்த படத்துக்கும் ஹீரோ என்று பேசப்பட்டது.

ஆனால், சூர்யாவோஆய்த எழுத்து, பேரழகன், சென்னையில் ஒரு மழைக்காலம், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷூடன் சேர்ந்து ஒருபடம் என்று அடுத்த வருடம் வரை தனது கால்ஷீட் டைரியை நிரப்பி வைத்துள்ளார்.

எனவே பாலா தனது படத்துக்கு கமலை அணுகியிருக்கிறார்.

பாலா பெருமதிப்பு வைத்திருக்கும் திரையுலகைச்சேர்ந்தவர்களில் கமல் முக்கியமானவர்.

பிதாமகன் படத்தைப் பார்த்து கமல் மனமாரப் பாராட்டியதை பாலாபெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது விருமாண்டி படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்தை இன்னும் கமல் தொடங்கவில்லை.

கிருஷ்ணலீலா என்ற காமெடிப் படம்தான் அடுத்து பண்ணப்போகிறார் என்று பேச்சு நிலவினாலும் இன்னும்முறையாக அது குறித்து அறிவிப்பு ஏதும் வரவில்லை.

இதில் கமலுடன் ஜோடி சேர மூத்த (முத்திய) நடிகைகள்ரம்யா கிருஷ்ணன், மீனா, கெளதமி ஆகியோர் போட்டி போட்டு வருகிறார்கள்.

இந் நிலையில்தான் பாலா கமலைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதனால் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்கள்என்று இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ஹிந்தியில் வசூலை வாரிக்குவித்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ். என்ற படத்தை கமல் செய்தால்நன்றாக இருக்கும் என்று அந்தப் பட உரிமையை வாங்கி வைத்துள்ள ஜெமினி நிறுவனம் கருதுகிறது.

படத்தில்நடிப்பது தொடர்பாக கமலிடம் பேசியிருக்கிறார்கள்.

எப்படியோ பாலா இயக்கத்தில் கமல் நடித்தால் அது மூன்றாம் பிறை, நாயகன் வரிசையில் வைக்கத்தகுந்தஇன்னொரு படமாக அமையும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil