விடுமுறை என நினைத்து விருமாண்டி ஷூட்டிங்கை பள்ளியில் நடத்திய கமல்... பின்னர் நடந்ததுதான் சுவாரசியம்

சென்னை: மீண்டும் துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் இன்று முதல் கலந்து கொள்கிறார்.

இதே போல அவர் நடித்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சபாஷ் நாயுடு திரைப்படமும் மீண்டும் துவங்கப்படலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் விருமாண்டி திரைப்படத்தின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை அதில் நடித்த காதல் சுகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விருமாண்டி

விருமாண்டி

தமிழில் ஹேராம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல் இயக்கிய திரைப்படம் விருமாண்டி. இரண்டு கோணங்களில் இரண்டு கதாபாத்திரங்கள் கதையை சொல்வது போல விருமாண்டி திரைப்படம் அமைந்திருக்கும். இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளை சந்தித்த பின்னர்தான் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டது.

 கமலின் திட்டம்

கமலின் திட்டம்

நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் கமல் மற்றும் இயக்குநர் மணிரத்தினம் எந்த ஒரு படத்திலும் பணிபுரியவில்லை. ஆனால் விருமாண்டி படத்தின் கதையை எழுதி முடித்தவுடன் மூன்று இயக்குநர்கள் சேர்ந்து ஒரு படத்தை இயக்கலாம் அதாவது விருமாண்டி படத்தில் கமல் சொல்லும் கதையை கமல்ஹாசன் அவர்களும் இன்னொரு கதாபாத்திரம் சொல்லும் கதையை மணிரத்தினம் அவர்களும் மூன்றாவது கதாபாத்திரம் சொல்லும் கதையை சிங்கீதம் சீனிவாசன் அவர்களும் இயக்குவதாக கமல் திட்டமிட்டிருந்தாராம்.

 மணிரத்னம் மறுப்பு

மணிரத்னம் மறுப்பு

ஆனால் அதே வேளையில்தான் ஆயுத எழுத்து திரைப்படத்தின் கதையை படமாக்க மணிரத்தினம் திட்டமிட்டிருந்தாராம். அந்தப் படத்திலும் மூன்று கதாநாயகர்கள் தங்களுடைய கோணத்திலிருந்து கதைகளை கூறுவார்கள். இப்படிப்பட்ட திரைக்கதைகள் அமைப்பது ஒரு விதமான யுக்தி. வெளிநாட்டு படத்தில் அந்த யுக்தியை பார்த்துதான் இருவருமே இன்ஸ்பயர் ஆகி தனித்தனியாக கதைகளை எழுதியுள்ளனர். எனவே விருமாண்டி படத்தில் தான் பணிபுரியவில்லை என்று மணிரத்தினம் கூறிவிட்டாராம். அதன் பிறகு முழு படத்தையும் தானே இயக்க துவங்கினார் கமல்ஹாசன்

 கமலின் செயல்

கமலின் செயல்

ஒரு நாள் பள்ளியில் கோர்ட் செட்டப் போல அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. மொத்த படமும் லைவாக பேசி நடித்ததால் எந்த விதமான சப்தமும் வரக்கூடாது. அப்படி இருக்க, சூட்டிங் துவங்கப்படும்போது எங்கேயோ பத்து பேர் பேசுவது போல் சத்தம் கேட்டதாம். கமல் சார் மைக்கில் சைலன்ஸ் என்று கத்தினாராம். ஆனால் தொடர்ச்சியாக இவர் சொல்ல சொல்ல அந்தச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க எங்கிருந்துதான் வருகிறது என்று துணை இயக்குநர்கள் போய் பார்த்துள்ளார்கள். அப்போது அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்ததாகவும், சூட்டிங்கிற்கு இடையூறு இருந்தால் சீக்கிரம் வகுப்பை முடித்து விடுவதாகவும் அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார். அதை கேள்விப்பட்ட கமல் படப்பிடிப்பினால் பாடம் நடத்துவதற்கு தடங்கல் ஏற்படக்கூடாது. எனவே படப்பிடிப்பை தள்ளி வைத்துக் கொள்கிறேன் என்று அந்த ஸ்பெஷல் கிளாஸிற்கு இடையூறு இல்லாமல் வழி வகுத்து கொடுத்தாராம் கமல் ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X