»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"கரகாட்டக்காரன்" மூலம் அறிமுகமாகி தமிழில் ஒரு ரவுண்ட் வந்து, காணாமல் போன கனகா மீண்டும்நடிக்க வருகிறார், ஆனால் சின்னத் திரையில்.

1990களின் ஆரம்பத்தில் வந்த முதல் படமே தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு ஓட, சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்துடன் "அதிசயப் பிறவி"யில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார் கனகா.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் சில படங்களில் மட்டும் தலைகாட்டி விட்டு காணாமல் போனார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன் தாயார் தேவிகா இறந்ததைத் தொடர்ந்து மிகவும் சோகத்தில்ஆழ்ந்திருந்த கனகா, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இடையில் ஒரு சில காமெடிப்படங்களில் மட்டும் தோன்றினார்.

இந்நிலையில் தற்போது முழுத் தெளிவு பெற்று மீண்டும் நடிக்க கனகா முடிவெடுத்துள்ளார். ஆனால்வெள்ளித் திரையில் அல்ல, சின்னத் திரையில்.

இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கும் அவர் வந்துள்ளார். நடித்தால் டி.வி.சீரியல்களில் நடிப்பது என்று கனகா முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள்தெரிவித்தனர்.

விரைவிலேயே கனகா நடித்து, அழவைக்கும் டி.வி. சீரியல்களை நம்மூர் பெண்மணிகள்எதிர்பார்க்கலாம்.

ரம்பா படத்தில் கோவிந்தா:

ரம்பா தயாரித்து, நடித்து வரும் "த்ரீ ரோஸஸ்" படத்தில் பிரபல இந்தி நடிகரான கோவிந்தா ஒருபாட்டுக்கு ஆடியுள்ளார். உடன் ஆடுபவர்? வேறு யார், ரம்பாவேதான்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் "த்ரீ ரோஸஸ்" படத்தைத் தன் சகோதரருடன் ரம்பா தயாரிக்கத்தொடங்கினார். ரம்பா தவிர ஜோதிகா மற்றும் லைலா கதாநாயகிகளாக வரும் இந்தப் படத்தில்மும்தாஜும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தி நடிகர் கோவிந்தாவுடன் இந்தப் படத்திற்காக ரம்பா ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.

வித்தியாசமான செட்டுக்களைப் போட்டு (கோவிந்தா ஆயிற்றே) இந்தப் பாடல் காட்சிபடமாக்கப்பட்டுள்ளதாம்.

கார்த்திக் ராஜாவின் இசையில் இந்தப் பாடல் காட்சி மிகவும் அருமையாக வந்துள்ளதாகசொல்லிக்கிறாங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil