»   »  மீண்டும் கனகா!

மீண்டும் கனகா!

Subscribe to Oneindia Tamil

டிரவுசர் பாண்டி ராமராஜனுடன் கரகாட்டம் ஆடிய கனகா பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டுகிறார் நடிகை படம் மூலமாக.

அந்தக் காலத்து அழகு ராணி தேவிகாவின் அருந்தவப் புதல்வியான கனகா, கரகாட்டக்காரன் மூலமாக நடிகை ஆனார். முதல் படமே மெகா ஹிட் ஆனதால் கனகாவைத் தேடி பல படங்கள் பாய்ந்து வந்தன.

வந்த வாய்ப்புகளை வாரிப் போட்டு வரிசை கட்டி நடித்து வந்த கனகா, உச்சகட்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி போட்டு ஸ்டார் ஆனார்.

முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாது, 2வது ரேங்க், 3வது ரேங்க் நடிகர்களுடனும் ஜோடி போட்டு கலக்கி வந்த கனகாவுக்கு நாளடைவில் மார்க்கெட் சரிந்து போனது. இந்த நிலையில்தான் தேவிகாவும் மரணமடைந்தார்.

அம்மாவின் மறைவால் அப்செட் ஆகிப் போன கனகா, ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கு அம்மா வழியில் தனக்கு மாமா முறை வரும் ஒருவரை சத்தம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டு இல் வாழ்க்கையில் நுழைந்தார்.

சுத்தமாக சினிமாவை மறந்து போயிருந்த கனகாவை சமீபத்தில் இயக்குநர் பாபுகணேஷ் நேரில் பார்த்துப் பேசியுள்ளார். தான் தயாரித்து, இயக்கி, நடிக்கும் நடிகை படத்தில் நீங்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அவர் அணத்தவே அவரது அன்புத் தொல்லையைத் தட்ட முடியாமல் (தாங்க முடியாமல்) சரி என்று சொல்லியுள்ளாராம் கனகா.

நன்கு பூசிய உடலுடன் ஆளே மாறிப் போயுள்ளாராம் கனகா. இருந்தாலும் அந்த அழகு முகம் மட்டும் அப்படியே இருக்கிறதாம். கனகாவுக்கு நடிகை படம் 2வது இன்னிங்ஸைக் கொடுக்கும் என பாபு கணேஷ் எல்லோரிடமும் சொல்லி வருகிறார்.

பாபு கணேஷ் எடுத்த எந்தப் படமும் இதுவரை உருப்படியாக வந்ததில்லை, ஓடியதும் இல்லை. இந்த நிலையில் கனகாவுக்கு வாழ்க்கை அளிக்கப் போறாராக்கும் என்று கோலிவுட்காரர்கள் நமட்டுச் சிரிப்புடன் சுட்டிக் காட்டுகிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil