»   »  சீமான் படத்தில் கனிமொழி

சீமான் படத்தில் கனிமொழி

Subscribe to Oneindia Tamil
Kanimoli with Karunanidhi
திமுக எம்.பியும், முதல்வர் கருணாநிதியுன் புதல்வியும், கவிஞருமான கனிமொழி, இயக்குநர் சீமானின் வாழ்த்துக்கள் படத்தில் நடிக்கிறார்.

தம்பியைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வாழ்த்துக்கள். தம்பி நாயகன் மாதவன்தான் இப்படத்திலும் நாயகன். பாவனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் கனிமொழியை, கவிஞர் கனிமொழியாகவே ஒரு காட்சியில் நடிக்க வைக்க தீர்மானித்தார் சீமான். இதுகுறித்து கனிமொழியிடமும் அவர் பேசினார். உடனே அதற்கு சம்மதித்த கனிமொழி நடித்தும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சீமானிடம் கேட்டபோது, நட்புக்காகவே அவர் நடித்துக் கொடுத்தார். மற்றபடி வேறு எந்த விசேஷ காரணமும் இல்லை என்றார்.

தம்பிக்குப் பிறகு சீமானும், மாதவனும் இணைந்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

'தம்பி'களின் படம் வெல்ல 'வாழ்த்துக்கள்'!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil