»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் வசனங்கள் வருவதால் எச்2ஓ என்ற கன்னடப் படத்தைத் திரையிட்ட பல்வேறு திரையங்குகள் மீது கடும்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த வசனங்கள் அனைத்தையும் நீக்கிவிட அந்தப் படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

பிரபு தேவா, கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் தமிழ் வசனங்களும், நான் உன்னைவிட மாட்டேன் போன்ற சில தமிழ் பாடல் வரிகளும் வருகின்றன.

இதற்கு கன்னட சாளுவளி என்ற அமைப்பை வைத்துக் கொண்டு தமிழர் எதிர்ப்பு செயல்களில் ஈடுபட்டு வரும்வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தை திரையிட்ட திரையரங்களுடன் கன்னட வெறிக் கும்பல்கள் நுழைந்து தாக்குதல் நடத்தின. இதனால்,இந்தப் படத்துக்கு மக்கள் வருவது நின்று போய்விட்டது.

மேலும் பல திரையரங்கு உரிமையாளர்களும் இந்தப் படத்தை எடுத்துவிட்டனர்.

இதனால், படத்தில் இருக்கும் அனைத்துத் தமிழ் வசனங்களையும் நீக்கிவிடவும், தமிழபாடல் வரிகளைநீக்கிவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் தான் இந்தப் படத்தின் ஓப்பனிங் ஷாட் வரும். இதையும் நீக்கிவிடவும் முடிவெடுத்துள்ளதாகதயாரிப்பாளர் தனராஜ் கூறினார்.

கன்னடதுக்கு கை தட்டும் தமிழன்:

ஆனால், தமிழகத்தில் கன்னட நடிகர்களுக்கு முழு ஆதரவு தரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"அருணாசலம் படத்தில் மாத்தாடு மாத்தாடு மல்லிகே என்று தனது தாய்மொழியான கன்னடத்தில் ரஜினி பாடும்போதுபாவப்பட்ட தமிழர்களான நாம் அதற்குக் கைத் தட்டினோம்.

மாத்தாடு மாத்தாடு மல்லிகே என்றால் மல்லிகையே பேசு பேசு என்று அர்த்தம். மாத்தாடு என்றால் பேசு என்றுஅர்த்தம்.

வாட்டாள் நாகராஜ் போன்றவர்களின் இந்த கன்னட வெறியர்களின் செயலைத் தட்டிக் கேட்க வேண்டிய கட்டாயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் பிற கன்னடர்களான அர்ஜூன், ரமேஷ் அரவிந்த், பிரகாஷ் ராஜ், பிரபு தேவா, முரளி,மோகன், நடிகைகள் செளந்தர்யா, சங்கவி, சாக்ஷி, கவுசல்யா ஆகியோருக்கு உண்டு.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களை சூப்பர் ஸ்டார்களாக்கி முதல்வராகக் கூட ஏற்றுக் கொள்ளும் பக்குவம்தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை தமிழ் எதிர்ப்பைக் காட்டி வரும் கன்னட வெறியர்களுக்கு இந்த நடிகர்கள்எடுத்துச் சொன்னால் தான் தமிழ் மூலம் இவர்கள் ஈட்டிய பணத்துக்கும், புகழுக்கும் நன்றி உடையவர்களாகஇருப்பார்கள்.

மேலும் இவர்களுக்காக பாக்கெட் காசைப் போட்டு, போஸ்டர் அடித்து, கட்-அவுட் வைத்து, தலைவா என்றுநரம்புப் புடைக்கக் கத்தி இவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ் ரசிகர்களுக்காக இவர்கள்இதைச் செய்து தான் ஆக வேண்டும்.

இதை முன்னின்று செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு உண்டு.

ஏனென்றால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கன்னட திரையுலகத்தினர் ரஜினியிடம் தான் ஓடிவந்தனர். அவர் மூலம் தான் கருணாநிதியைச் சந்தித்தனர். ரஜினியும் பலமுறை பெங்களூருக்குப் பறந்து வந்துராஜ்குமார் மீட்பு நடவடிக்கைளில் ஈடுபட்டார்.

இப்போது அவரது சொந்த ஊரான கர்நாடகத்தில் தமிழ் வசனம் கொண்ட ஒரு படத்தின் மீது காறி உமிழ்ந்துகொண்டுள்ளனர்.

இதைத் தடுத்து நிறுத்துவாரா ரஜினி?

(இந்த விவகாரம் குறித்த முழு விவரம் இந்த வார "அலைகள்" இதழில்...

வாங்குங்கள் அலைகள்)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil