twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காசு பணம் துட்டு மணி மணி: அன்றே சொன்ன தீர்க்கதரிசி கண்ணதாசன்

    By Siva
    |

    Recommended Video

    காவிய கவிஞர் கண்ணதாசன்

    சென்னை: எத்தனை கவிஞர்கள் வந்தாலும் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான்.

    கவியரசர் கண்ணதாசனின் 91வது பிறந்தநாள் இன்று. கவிதை எழுதுவதிலும் சரி, பாடல்கள் எழுதுவதிலும் சரி கண்ணதாசனுக்கு நிகர் அவரே தான். அவர் என்றோ எழுதிய வரிகள் இன்றும் பலருக்கும் பொருந்தும்.

    இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டுள்ளது போன்று இருக்கிறது என்று கண்ணதாசன் பாடல் வரிகளை பார்த்து கூறியவர் பலர். ஏன் இன்னும் கூட கூறுகிறார்கள். அந்த அளவுக்கு எந்த காலத்திற்கும் பொருந்தும்படி தத்துவப் பாடல்கள் எழுதியுள்ளார்.

    சுமைதாங்கி

    சுமைதாங்கி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா என்ற பாடலை இன்று கேட்டால் கூட நமக்கே எழுதியது போன்று இருக்கும்.

    பரமசிவன் கழுத்தில்

    சூரியகாந்தி படத்தில் வேலையில் தன்னை விட தன் மனைவி கெட்டிக்காரியாக இருந்து அதிகம் சம்பாதிப்பதை பார்த்து கலங்கியிருக்கும் கணவனுக்காக கண்ணதாசன் எழுதிய வரிகள் தான் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?

    புத்தி

    புத்தியுள்ள மனிதரெல்லாம்
    வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
    புத்திசாலியில்லை என்று அன்னை படத்திற்காக கண்ணதாசன் எழுதியதில் தான் எவ்வளவு உண்மை உள்ளது.

    பணம்

    காசு பணம் துட்டு மணி மணி என்று இருக்கும் மக்கள் பற்றி காசே தான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா என்று அன்றே கண்ணதாசன் பாடல் எழுதிவிட்டார்.

    தெய்வம்


    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை... அடடா கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி

    தம்பி

    அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே என்று பழனி படத்திற்காக கண்ணதாசன் 1965ம் ஆண்டில் எழுதிய வார்த்தைகள் இன்றைய அவசர உலகத்திற்கு பொருந்தும்.

    English summary
    Today is Kannadasan's 91st birth anniversary. His legendary lines are applicable to all at all times.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X