»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தெற்கே த்ரிஷா மேட்டர் பரபரப்பைக் கிளப்பியது போல, வடக்கே கரீனா கபூர் காதலருக்கு முத்தம் கொடுத்ததாக ஒரு வீடியோகாட்சி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் கரீனாவிற்கு ஆதரவாக கமல் குரல் கொடுத்துள்ளார்.

தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு கிசுகிசு எழுத சூர்யா, ஜோதிகா என்று ரொம்ப அரிதாகத்தான் ஒரு காதல் ஜோடி சிக்கும்.அவர்களும் தங்களது காதலை லேசுக்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

ஆனால் பாலிவுட்டில் அப்படியல்ல. காதல் ஜோடிகளுக்கு அங்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. ஐஸ்வர்யா ராய்- விவேக்ஓபராய், பிபாஷா பாசு- ஜான் ஆப்ரஹாம், ராணி முகர்ஜி- கோவிந்தா, பெண் உதவி இயக்குநருடன் அமீர் கானுக்கு காதல் என்றுஒவ்வொருவரும் தன்னால் இயன்ற அளவுக்கு பத்திரிக்கையாளர்களுக்கு தீனி போட்டு வருகிறார்கள்.

அதேபோல பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான கரீனா கபூர், ஷாகீத் என்ற வளர்ந்து வரும் கதாநாயகனைக்காதலிப்பதாகக் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியே சுற்றுகிறார்கள் என்ற செய்தி மாநில எல்லைகளைத் தாண்டிஇந்தியா முழுவதும் பரவியுள்ளது.

அப்படி இருவரும் ஒரு முறை மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டிற்குச் சென்றதாகவும், அங்கு இருவரும் ஆவேசத்துடன்ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதை யாரோ ஒரு புண்ணியவான் கேமரா செல்போனில்படம்பிடித்து இன்டர்நெட்டில் உலவவிட்டுவிட்டார்.

அதோடு முத்தக் காட்சி ஸ்டில்களாகவும் பலருக்கு அனுப்பப்பட்டது. அதை மிட்டே என்ற ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுரசிகர்களிடம் பாராட்டையும், கரீனா- ஷாகீத்திடம் வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்டது.

நிறைய பேர் போன் போட்டு துக்கம் விசாரிக்க, டென்ஷனாகிப் போனார் கரீனா. அண்மையில் ஊட்டியில் ஒரு படப்பிடிப்பக்காகவந்திருந்த அவரிடம் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் விளக்கம் கேட்டபோது,

அந்தப் பத்திரிக்கை புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல. நான் பாரம்பரியமான ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவள். என்குடும்பத்திற்கு என்று பாலிவுட்டில் நல்ல பெயர் இருக்கிறது.

நான் அப்படியெல்லாம் முத்தம் கொடுக்கும் பெண் அல்ல. கிராபிக்ஸ் மூலம் இதை செய்துள்ளனர். ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டுஅந்தப் பத்திரிக்கை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன் என்று கூறினார்.

முதலில் கரீனாவின் வழக்கை சந்திப்பதாகக் கூறிய மிட் டே, அது கரீனாதான் என்பதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம்இருப்பதாகக் கூறியது. ஆனால் பத்திரிக்கை மீது இரண்டு வழக்குகளை போலீஸார் பதிவு செய்ததையடுத்து இப்போது அதுபின்வாங்கியுள்ளது.

இந்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக அந்த பத்திரிகையின் முதல் பக்கத்தில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.அதில், பிரபலமான இரண்டு இளம் உள்ளங்கள் காதலில் மூழ்கியிருப்பதை தெரிவிக்கவே நாங்கள் விரும்பினோம் என்றும்கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கரீனாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். நம்மூரு முத்தஸ்பெஷலிஸ்ட் கமலும் தனது ஆதரவுக் கரத்தை கரீனா பக்கம் நீட்டியுள்ளார்.

மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்காக மும்பையில் முகாமிட்டிருக்கும் கமல் இது தொடர்பாக கூறியதாவது:

இதுபோன்ற பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவர்களை வெகுவாக பாதிக்கும். அதே நேரத்தில் பத்திரிக்கையாளர்களைமுழுமையாகக் குற்றம் சாட்டவும் முடியாது. பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் பிரபலங்கள் கொஞ்சம்கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சரி, புகைப்படத்தில் இருப்பது கரீனா தானா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil