»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நடிகர் கார்த்திக் புதிதாக ஒரு சமூகநல அமைப்பை தொடங்கியுள்ளார்.

சமூக நல அமைப்பு என்று சொன்னாலும் அதில் அவர் அரசியலை புகுத்தி வருவது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜா மூலம் "அலைகள் ஓய்வதில்லை படத்தில் மீசை முளைக்காத பையனாக அறிமுகமானவர் நடிகர் முத்துராமனின்மகனான கார்த்திக். சூப்பர் ஹிட்டாக ஓடிய இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்திக் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார்.

கடந்த சில வருடங்களாக இவருக்கு படங்கள் அவ்வளவாக இல்லை. வஸ்துக்களுக்கு அடிமையானதோடு, இன்னபிற கெட்டவிஷயங்களும் சேர்ந்து அவரை முடக்கின. முடியும் அவரை விட்டுப் போய்விட்டது. அடிக்கடி கால்ஷீட் பிரச்சினையை தந்துதனது சினிமா வாழ்க்கையில் தானே டன் கணக்கில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்.

இப்போது வீட்டில் "சும்மா இருக்கும் கார்த்திக்கிற்கு கரை வேட்டி அணிய ஆசை ஏற்பட்டுவிட்டது. இதற்காக அவர்அம்மாவிடம் தூது அனுப்பினார். மன்னார்குடி வட்டாரமும் கார்த்திக்கு ஆதரவு தெரிவித்தது.

ஆனால், குண்டு கல்யாணம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் தரப்பட்டுள்ள நிலையில், கார்த்திக்கைசேர்த்துக் கொள்ள அதிமுக தலைமை முன் வரவில்லை.

இதனால் அவர் என்ன செய்வது என தடுமாறிக் கொண்டிருந்த போது தான் அவருக்கு தனது ரசிகர் மன்றங்களின் ஞாபகம் வந்தது.

கார்த்திக் முன்பு பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த போது, தென் மாவட்டங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள்இருந்தன. குறிப்பாக, அவர் சார்ந்த முக்குலத்தோர் சமூக இளைஞர்கள் மத்தியில கார்த்திக்கு நல்ல மவுசு இருந்தது.

இப்போது அந்த மன்றங்களுக்கு உயிர் தந்து, அதைக் கொண்டு புதிய அமைப்பை தொடங்க முடிவு செய்தார்.

இதையடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தனது கைப்படவே கடிதங்கள் எழுதினார். அதில், ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்துசரணாலயம் என்ற அமைப்பைத் தொடங்க இருப்பதாகவும், இதன் மூலம் ஊனமுற்றோர் காப்பகம், மருத்துவ முகாம், அனாதைஇல்லம் போன்றவற்றை நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளார் கார்த்திக்.

இந்த பொறுப்பை நிறைவேற்ற ஒரு பலமான மேடை தேவைப்படுவதால் நாம் நேர்மையான முறையில் செயல்பட்டு இந்த உலகைமகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவோம் (அப்படி போடு..) என்றும் அந்தக் கடிதத்தில் கார்த்திக் கூறியிருக்கிறார்.

தன்னை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாததால் விரக்தியடைந்த கார்த்திக் இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளதாகவேகருதப்படுகிறது. அதிமுகவின் முக்கிய ஓட்டு வங்கியான முக்குலத்தோர் சமூக வாக்குகளை தென் மாவட்டங்களில் கார்த்திக் குறிவைப்பதாக அக் கட்சி நிர்வாகிகள் சந்தேகப்படுகின்றனர்.

மேலும் விஜய்காந்துக்கு ஆதரவு என்று சொல்லிக் கொண்டு தேர்தல் நேரத்தில் பிரச்சாரம், கிரச்சாரம் என்று கிளம்பி வந்துசமூகரீதியில் ஓட்டு வேட்டையில் இறங்குவாரோ என்று அவர்கள் கருதுகின்றனர்.

ப்பூ.. கார்த்திக் தானே.. என்று இதை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உளவுப் பிரிவு மூலமாக அவர் மீது தீவிரமாகவே கண்பதித்திருக்கிறது அதிமுக தலைமை என்கிறார்கள்.

Read more about: actor karthik, welfare society

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil