»   »  'சேது சமுத்திரத்தில்' கார்த்திகா

'சேது சமுத்திரத்தில்' கார்த்திகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
தூத்துக்குடி, வீரமும் ஈரமும் புகழ் சஞ்சய் ராம், அடுத்து சேது சமுத்திரம் என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார்.

நிஜக் கதைகளை படமாக்குவதில் லேட்டஸ்டாக புகழ் பெற்று வருபவர் சஞ்சய் ராம். முதலில் தூத்துக்குடி படத்தை இயக்கினார். பின்னர் வீரமும் ஈரமும் என்ற படத்தை இயக்கி சமீபத்தில வெளியிட்டார். இந்த நிலையில் சேது சமுத்திரம் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் சஞ்சய் ராம்.

முதல் இரு படங்களை விட இந்தப் படத்திற்கான கலைஞர்கள் தேர்வு மற்றும் கதை குறித்து அதிக கவனம் செலுத்தப் போகிறாராம் ராம். இதுகுறித்து அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டம் குறித்த படம்தான் இது.

கடந்த சில மாதங்களாக இந்தத் திட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மிகுந்த கவனம் செலுத்தி கலைஞர்களை தேர்வு செய்யவுள்ளேன். கதையிலும் கூட சர்ச்சை வந்து விடாமல் கவனமாக இருக்கிறேன் என்றார்.

இப்படத்தின் நாயகனாக சரவணன் நடிக்கவுள்ளார். வீரமும் ஈரமும் படத்திலும் சரவணன்தான் நாயகன் என்பது நினைவிருக்கலாம். இவர் தவிர முரளியும் படத்தில் இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முரளி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி படம் மூலம் சஞ்சய் ராமால் அறிமுகப்படுத்தப்பட்ட கார்த்திகா, சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் சஞ்சய்ராமுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இவர்கள் தவிர விவேக்கும் படத்தில் இடம் பெறுகிறார்.

அட்டகாசமான ஐட்டம் ஆட்டத்திற்கு லக்ஷ்யாவைப் பிடித்துள்ளனர். தினாவின் திகுதிகு இசையில் உருவாகும் பாடலுக்கு லக்ஷயா, ஆட்டம் போடவுள்ளாராம்.

சஞ்சய் ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 23ம் தேதி தொடங்கவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil