twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருணாநிதி... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமை!

    கருணாநிதியின் திரை வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யத் தொகுப்பு

    |

    Recommended Video

    சீக்கிரம் எழு - சிறகு விரி...கருணாநிதி பிறந்தநாள்- வீடியோ

    சென்னை: சினிமா, இலக்கியம், அரசியல் எனப் பன்முகத் திறமையாளரான திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

    தன் அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் கதைக்களங்கள் மூலம் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத இடம் பிடித்தவர் கருணாநிதி.

    Karunanidhis contribution to tamil cinema

    இதோ அவரது திரைப் பயணம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்:

    • கருணாநிதியின் எழுத்தில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்' ஆகும். இது கடந்த 1944ம் ஆண்டு திருவாரூர் பேபி டாக்கீஸில் நடத்தப்பட்டது.
    • சிவாஜி, எம்.ஜி.ஆர். என அப்போதைய முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களைத் தந்தவர் கருணாநிதி. உதாரணத்திற்கு சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .
    • முதன்முதலில் எம்.ஜி.ஆர். முன்னணி வேடத்தில் நடித்த படமான ராஜகுமாரி தான், கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் ஆகும். இது கடந்த 1947ம் ஆண்டு ரிலீசானது.
    Karunanidhis contribution to tamil cinema
    • தனது திரைப்பயணத்தை ராஜகுமாரி மூலம் 1947ல் தொடங்கிய கருணாநிதி, 2011ம் ஆண்டு பொன்னர்- சங்கர் படம் வரை 64 வருடங்கள் தொடர்ந்தது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் முத்திரைப் பதித்தவர் கருணாநிதி.
    • 21 நாடகங்களை எழுதிய கருணாநிதி, 69 படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவற்றில் கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் 'பராசக்தி .
    • கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், 'ஸ்ரீ ராமானுஜர்' - மதத்தில் புரட்சி செய்த மகான். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு அவர் வசனம் எழுதத் தொடங்கியபோது அவரது வயது 92 என்பது குறிப்பிடத்தக்கது.
    • கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா. கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை அவர் வழங்கினார். இதேபோல், எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.

    English summary
    The DMK president Karunanidhi had made a lot of contribution to tamil cinema by his writings.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X