»   »  'காதலிக்க நேரமில்லை'!

'காதலிக்க நேரமில்லை'!

Subscribe to Oneindia Tamil


பழம்பெரும் கலக்கல் காமெடிப் படமான காதலிக்க நேரமில்லை படம் மீண்டும் ரீமேக் ஆகிறது. மனோபாலா படத்தை இயக்கப் போகிறார்.

Click here for more images

வெளியிலிருந்து சுட்டுப் படம் எடுத்த காலம் கோலிவுட்டில் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் தமிழிலேயே வெளியான சூப்பர் ஹிட் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

நான் அவனில்லை இதை ஆரம்பித்து வைத்தது. இப்போது பில்லா ரீமேக் ஆகி வருகிறது. தொடர்ந்து பல படங்களை ரீமேக் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், டி.ஆர்.பாலையா, முத்துராமன், ரவிச்சந்திரன், நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ ஆகியோரின் கலக்கல் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற காதலிக்க நேரமில்லை படம் ரீமேக் ஆகவுள்ளது. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இப்படம், காமெடிப் படங்களுக்கெல்லாம் மகுடம் எனலாம்.

இப்படத்தை இப்போது மனோபாலா ரீமேக் செய்கிறார். இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு தட்ஸ் தமிழ் தனது வாசகர்களுக்கு முதல் முறையாக அறிவித்தது. நல்ல தயாரிப்பாளருக்காகவும், கலைஞர்களுக்காவும் மனோ பாலா காத்திருப்பதாக கூறியிருந்தோம்.

இப்போது எல்லாம் முடிவாகி, காதலிக்க நேரமில்லை ரீமேக்கை உருவாக்கும் நேரம் வந்து விட்டது.

ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. மனோபாலா இணை தயாரிப்பாளராக செயல்படுவார்.

உன்னாலே உன்னாலே பட நாயகன் வினய், ரவிச்சந்திரன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். முத்துராமன் கேரக்டருக்கு பிருத்விராஜைப் போட்டுள்ளார் மனோபாலா.

படத்தில் மூன்று ஹீரோயின்கள். நமீதா, சந்தியா, கீர்த்தி சாவ்லா ஆகியோர் காதலிக்க நேரமில்லை ரீமேக்கில் நடிக்கவுள்ளனர்.

காமெடி போர்ஷனுக்குத்தான் வெயிட்டான ஆட்களைப் போடப் போகிறார் மனோபாலா. அவர்கள் பிரகாஷ் ராஜ், வடிவேலு. யார் கேரக்டரில் அவர்கள் நடிக்கப் போகிறார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருவரிடமும்கால்ஷீட் கேட்டு அணுகியுள்ளார் மனோபாலா. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார்.

காலத்தையும் தாண்டி இன்று வரை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தை, எப்படி கொடுத்து அசத்தப் போகிறார் மனோபாலா என்ற எதிர்பார்ப்பு இப்போதே கோலிவுட்டில் எழுந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil