»   »  'ட்ரிம்' ஆன கற்றது தமிழ்!

'ட்ரிம்' ஆன கற்றது தமிழ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கற்றது தமிழ் படத்தின் சில காட்சிகளுக்கு அதிருப்தி எழுந்ததால் அந்தக் காட்சிகளை மாற்றி விட்டனர். இதனால் முதல் பாதி படத்தில் சில காட்சிகள் குறைக்கப்பட்டு ட்ரிம் ஆகியுள்ளது.

Click here for more images

ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள கற்று தமிழ் படத்தில் பிரபாகரன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ஜீவா. கடந்த வாரம் படம் திரைக்கு வந்தது. இப்படத்தை தமிழகத்தில் திரையிடும் உரிமையை நடிகர் கருணாஸ் பெற்றுள்ளார்.

திரையிட்ட இடமெல்லாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இருப்பினும் முதல் பாதிப் படத்தில் வரும் சில காட்சிகள், ரத்தக்களறியான சில காட்சிகள், மெதுவாக நகரும் திரைக்கதை ஆகியவற்றுக்கு ஆங்காங்கு அதிருப்தி கிளம்பியுள்ளது.

இதையடுத்து சில வன்முறைக் காட்சிகளையும், முதல் பாதிப் படத்தில் வரும் சில காட்சிகளையும் இயக்குநர் ராம் நீக்கி விட்டார்.

இதுகுறித்து கருணாஸ் கூறுகையில், ரசிகர்களுக்குப் பிடித்தது போல படம் கொடுக்கவே அனைவரும் விரும்புகிறோம். அந்த வகையில்தான் இந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாற்றத்திற்குப் பிறகு படம் சூப்பராக வந்துள்ளது என்றார்.

வாழ்க தமிழ்!

Read more about: jeeva karunas katrathu tamizh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil