»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

குட்டி பத்மினி தனது மகளை வைத்துத் தயாரித்து முடித்து, இப்போதும் பெட்டியிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் காதலே சுவாசம் படத்தின் பெயரை தில்ரூபா என்று மாற்றி விட்டார்கள்.

முதலில் ரிதி என்ற பெயரில் தனது மகளை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார். படம் எடுக்கப்பட்டபோதுஅதன் பெயர் காதல் சொக்குதே. மகளை ஹீரோயின் ஆக்குவதற்காக எடுத்த படம் இது. இதனால் புதுமுகமானஅரவிந்தா என்பவரை அவருக்கு ஜோடியாகப் போட்டார்.

படத்தை இயக்கியது குட்டி பத்மினியின் கணவர் பிரபு நேபால். பல வெற்றிகரமான டிவி தொடர்களைஇயக்கியவர்.

தனது மகளும் புது ஹீரோவும் மட்டும் நடித்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால் அப்போது பிஸியாகஇருந்த மீனாவையும், வீட்டில் இருந்த கார்த்திக்கையும் புக் செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு எல்லாம் கூட்டிப்போய் ஒரு மாதம் தங்கிருந்து படத்தை எடுத்து முடித்துவிட்டு வந்தனர்.

படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே அதன் பெயரை காதலே சுவாசமாக மாற்றினார்கள். ஹீரோயின்பெயரையும் ரிதியில் இருந்து கீர்த்தனா என்று மாற்றினார்கள்.

ஆனால், படம் ரெடியாகி பல மாதங்கள் ஓடிவிட்ட நிலையிலும் அதை வாங்க இதுவரை யாரும் முன் வரவில்லை.

விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது காதலே சுவாசம் என்ற அறிவிப்புடன் டிவிக்களில் டிரைலர்களும் ஓடின.ஆனால், படம் வந்தபாடில்லை. இதனால் டிவிக்காரர்கள் டிரைலர்களைக் காட்டுவதையும் நிறுத்திவிட்டனர். படம்பெட்டியில் தொடர்ந்து படுத்து குறட்டை விட்டு வருகிறது.

இந் நிலையில் படத்தின் பெயரையும் ஹீரோயின் பெயரையும் மீண்டும் மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்றுயாரோ சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் படத்தின் பெயர் இப்போது தில்ரூபா என்று மாற்றப்பட்டுவிட்டது. ரிதியாக இருந்து கீர்த்தனா ஆனஹீரோயினின் பெயரும் கேரன் ராய் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இனியாவது வினியோகஸ்தர்களின் மனம் இறங்குமா என்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார் குட்டி பத்மினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil