கீதாஞ்சலி முதல் தசரா வரை...கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் டாப் மற்றும் பிஸியான ஹீரோயினாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் பழைய நடிகை மேனகா மற்றும் சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் குமாரின் மகளும் ஆவார்.

ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கீர்த்தி சுரேஷிற்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

2000 ல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், பிறகு படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். 2005 வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ், பிறகு ஃபேஷன் டிசைனிங் முடித்ததால். ஃபேஷன் துறையில் சாதிக்க வேண்டும் என தீவிரமாக வேலை தேடி கொண்டிருந்த சமயத்தில் கீர்த்திக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படமே ஹிட்

முதல் படமே ஹிட்

சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் கீர்த்தி. மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய கீர்த்தி, இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பல விருதுகளை வென்றார். படமும் செம ஹிட் ஆனது. இதனால் கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் உயர்ந்தது.

தூக்கி விட்ட ரஜினி முருகன்

தூக்கி விட்ட ரஜினி முருகன்

2015 ல் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இரண்டாவதாக சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் பிளாக்பஸ்டர் படமானது. இதனால் முன்னணி நடிகையான கீர்த்திக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தமிழில் வர துவங்கியது. வரிசையாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆகின.

சிறந்த நடிகைக்காக தேசிய விருது

சிறந்த நடிகைக்காக தேசிய விருது

தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா என டாப் ஹீரோக்கள் பலருடன் சேர்ந்து நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் இவர் நடித்த, நடிகை சாவித்ரியின் வாழ்க்கை படமான மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார்.

ஒரே நேரத்தில் பல படங்கள்

ஒரே நேரத்தில் பல படங்கள்

தற்போது மலையாளத்தில் மரக்கர் : அரபிக்கடலின்டே சிம்ஹம், தெலுங்கில் குட் லக் சாகி, தமிழில் அண்ணாத்த, சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து மலையாளத்தில் வாஷி, தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா , போலா ஷங்கர், தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டிரெண்டிங்கில் கீர்த்தி சுரேஷ்

டிரெண்டிங்கில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் அவரது ரசிகர்கள் HBKeerthySuresh என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். இதில் ஏராளமானவர்கள் கீர்த்தி சுரேஷிற்கு வாழ்த்தையும், அவரின் பழைய ஃபோட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X