»   »  டயானா பரம்பரையும், நைட்லியும்!

டயானா பரம்பரையும், நைட்லியும்!

Subscribe to Oneindia Tamil


இளவரசி டயானாவின் பரம்பரையைச் சேர்ந்த இளவரசி ஜார்ஜியானாவின் வேடத்தில் ஹாலிவுட்டின் ஹாட் ஸ்டார் கீரா நைட்லி நடிக்கிறார்.

Click here for more images

ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் கலக்கல் நட்சத்திரம் நைட்லி. கிளாமரிலும், நடிப்பிலும் ஹாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் நைட்லி.

நைட்லி இப்போது நடித்து வரும் 'தி டச்சஸ்' என்ற படம் ஹாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் படத்தின் கதை அப்படி.

18வது நூற்றாண்டில் வாழ்ந்த பேரழகி ஜார்ஜியானா. பெரும் கோடீஸ்வரி. ஆடம்பரமாக செலவிடுவதிலும், சொகுசு வாழ்க்கைக்கும் பெயர் போனவர். டெவன்ஷயர் இளவரசி. இவர் வேறு யாருமல்ல, உலகையேக் கலக்கிய மறைந்த இளவரசி டயானாவின் மூதாதையர்தான் இந்த ஜார்ஜியானா.

அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்தக் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவராம் இந்த ஜார்ஜியானா. இந்த ஜார்ஜியானா கேரக்டரில்தான் நைட்லி நடித்துக் கொண்டிருக்கிறார்.

நம்மூர் நடிகைகள் போல இயக்குநர்கள் சொல்லிக் கொடுக்கும் வசனங்களைப் பேசி விட்டுப் போகும் சாதாரண நடிகை கிடையாது நைட்லி. ஜார்ஜியானா கேரக்டரை கச்சிதமாக செய்வதற்காக அலையோ அலை என்று அலைந்து பல்வேறு தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

லண்டனில் உள்ள பிரபல மாரிடைம் மியூசியத்திற்கும் ஒரு விசிட் அடித்து முக்கியத் தகவல்களை சேகரித்துள்ளாராம்.

நைட்லி இதற்கு முன்பு நடித்த 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் 'படமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம்.

அழகும், நடிப்பும் ஒரு சேர அமையும் நடிகைகள் ரொம்ப அரிது. ஆனால் நைட்லி, இரண்டையும் கலந்து மிக்சர் ஆக்கி, தொடர்ந்து சிக்சர் அடித்து வருகிறார் ஹாலிவுட்டில். ஜார்ஜியானா கேரக்டரில் எப்படிக் கலக்கப் போகிறாரோ என்று ஹாலிவுட்டில் ஏக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Read more about: diana, generation, georgiana

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil