»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் பிதாமகன் படத்தின் இரு சிறப்புக் காட்சிகளைப் போட்டுக் காட்டினார் இயக்குனர் பாலா.

ஒன்று நடிகைகளுக்கு மட்டும். இன்னொன்று கமலுக்கு மட்டும். சமீபத்தில் மகளிர் மட்டும் ஸ்பெஷல் ஷோ மாதிரிநடிகைகள் மட்டும் சிறப்புக் காட்சியைப் போட்டிக் காட்டினார் பாலா.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன் தேவி தியேட்டரில் நள்ளிரவுக்கு மேல் கமலுக்காக பிதாமகன்ஓட்டப்பட்டது. அவருடன் உட்கார்ந்து பாலாவும், தயாரிப்பாளர் துரையும் உட்கார்ந்து படத்தைப் பார்த்தனர்.

விக்ரமின் நடிப்பு, கதை சொன்ன பாலாவின் டைரக்டன் என இரண்டையும் பற்றி கமல் மிகவும் பிரம்மித்ததாகசொல்கிறார்கள்.

இதனால் இப்போது கோடம்பாக்கத்தில் ஒரு இன்பமான பரபரப்பு. அடுத்து கமலும் பாலாவும் இணையப்போகிறார்கள் என்பது தான் அது. தனது படத்துக்கு சூப்பர் ஹீரோக்களை பாலா எப்போதுமே நாடியதில்லை.

அவருக்குத் தேவையெல்லாம் கொடுத்த கேரக்டராக வாழ்ந்து காட்டு நல்ல நடிகர் மட்டுமே. அந்த வகையில்பாலாவின் டைரக்ஷனுக்கு கமல் மிகச் சரியாகவே பொறுந்துவார் என்பதால், இருவரும் சேர்ந்து படம் செய்யப்போவதாக பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது. இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை.

நடிப்பு பிதாமகனும் டைரக்ஷன் பிதாமகனும் இணைந்தால் தமிழ் சினிமா, இன்னொரு உச்சியை நிச்சயம்தொடலாம்.

கிரண் ஆபரேசன்

தொந்தியால் தான் தனக்கு வாய்ப்புக்கள் போய்விட்டதாகக் கருதும் கிரண், இப்போது அதைக் குறைக்க அறுவைசிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

சொந்த ஊர் ராஜஸ்தானுக்கு போய், அங்கே ஜிம்முக்குப் போய் எந்தப் பயனும் ஏற்படாததால், ஆபரேசன் தான்ஒரே வழி என்று அதற்கான ஆலோசனைகளில் இறங்கியுள்ளாராம்.

இதற்கிடையே இடையிடையே ஹைதராபாத்துக்கு வந்து நடிகர்களைப் பார்த்து முயற்சி பண்ணியதில் அங்கே சிலபடங்கள் கிடைத்துள்ளனவாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil