»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஜெமினி நாயகி கிரண் டைரக்டர்களை வளைப்பதில் பலே கில்லாடியாக இருக்கிறார். முதலில் 30 லட்சம் 40 லட்சம் என்றுசம்பளம் கேட்டு மிரட்டினார். அவரை தயாரிப்பாளர்கள் ஓரம் கட்டவே, கொடுக்கிறதைக் கொடுங்கள் என்று இறங்கிவந்திருக்கிறார்.

இதனால் பல படங்களில் புக் ஆகியிருக்கிறார். அத்தோடு தான் நடிக்கும் படங்களின் டைரக்டர்கள், ஹீரோக்களை வைத்தேஇன்னொரு டைரக்டரின் படத்திலும் சான்ஸ் வாங்கும் திறமையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

இதனால் இவர் கைவசம் இப்போது பல படங்கள்.

அஜீத்துடன் வில்லன் படத்தில் நடித்து வரும் இவர், பிரசாந்துடன் வின்னர், அடுத்து கமலின் அன்பே சிவத்திலும் ஜோடி சேரப்போகிறார். கமலிடம் இவரை சிபாரிசு செய்தவர் வின்னர் படத்தின் டைரக்டர் சி.சுந்தர் (குஷ்பூவுக்கு தெரியுமா?).

அன்பே சிவத்தை இயக்க இருப்பவரும் இவர்தான். அதே போல பிரசாந்தும் இவருக்கு சிலரிடம் சிபாரிசு செய்திருப்பதாகக்கூறப்படுகிறது. வில்லனின் டைக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இவரை சிபாரிசு செய்தது அஜீத்.

ஜெமினியில் நடிப்பதற்கு முன் பலமுறை மும்பையில் இருந்து வந்து சென்னையில் டேரா போட்டு பல சினிமா கம்பெனிகள் ஏறிஏறி தனது ஆல்பத்தைக் கொடுத்து சான்ஸ் கேட்டவர் கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு வாழத் தெரிந்த நடிகை சிம்ரன். சமீபத்தில் தனது தங்கை மோணல் தற்கொலை தொடர்பாக டான்ஸ் மாஸ்டர் கலா,பிருந்தா, மும்தாஜ் ஆகியோர் மீது பரபரப்பாக புகார் கூறிய சிம்ரன் அவர்களுடன் சமாதானாம் ஆகிவிட்டார்.

பிருந்தாவின் காலில் விழுந்து சிம்ரன் மன்னிப்பு கேட்டதாகத் தெரிகிறது. அதே போல மும்தாஜையும் சந்தித்து மன்னிப்புகேட்டுவிட்டார். மும்தாஜின் மேனேஜர் இப்போது சிம்ரனுக்கும் சான்ஸ் வாங்கித் தரும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் அர்ஜூனின் ஆஸ்தான நடிகை ஆகி வருகிறார் சிம்ரன். ஏழுமலையைத் தொடர்ந்து ஒற்றன் என்ற தனது அடுத்தபடத்திலும் சிம்ரனுடன் ஜோடி சேருகிறார் அர்ஜூன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil