»   »  32 நடிகர், நடிகையர் இன்று மலேசியா பயணம்

32 நடிகர், நடிகையர் இன்று மலேசியா பயணம்

Subscribe to Oneindia Tamil
Nila

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிக்காக தமிழ் திரையுலகைச் சேர்ந்த 32 நடிகர், நடிகையர் அடங்கிய குழு இன்று இரவு மலேசியா புறப்பட்டுச் செல்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்கான நிதி திரட்டுவதற்காக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வருகிற 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. 21ம் தேதி மலேசியாவிலும், 23ம் தேதி சிங்கப்பூரிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் வகையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும், பொதுச் செயலாளர் ராதாரவியும் ஏற்கனவே அங்கு கிளம்பிப் போய் விட்டனர்.

இந்த நிலையில், இன்று இரவு விக்ரம், மாதவன், பிரபு, ஜீவா, ஸ்ரீகாந்த், ஷாம், பரத், சிபி, பிரசன்னா, செந்தில், சார்லி, அப்பாஸ், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி, மனோரமா, ராதிகா, ஸ்ரீபிரியா, நமீதா, நிலா, மும்தாஜ், சங்கீதா, மாளவிகா, சதா, விந்தியா, சந்தியா, பத்மப்ரியா, ரகசியா, கனிகா, அபர்ணா, டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட 32 பேர் அடங்கிய குழு மலேசியா செல்கிறது.

நடிகர் விஜய்யும், திரிஷாவும், குருவி படப்பிடிப்புக்காக ஏற்கனவே மலேசியாவில் உள்ளனர். அவர்கள் நேராக கலை நிகழ்ச்சிக்கு வந்து விடுவார்கள். விவேக்கும் குருவி படப்பிடிப்பில்தான் உள்ளார். அவரும் வந்து விடுவார்.

நாளை இன்னொரு குழு மலேசியா கிளம்புகிறது. இந்தக் குழுவில் சிம்பு, சினேகா, குஷ்பு, கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நாளை இரவு மலேசியா செல்கிறார்கள்.

இரு கலை நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு 24ம் தேதி நடிகர், நடிகையர் பட்டாளம் சென்னைக்குத் திரும்புகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil