»   »  கோலிவுட்- டாப் 5

கோலிவுட்- டாப் 5

Subscribe to Oneindia Tamil
Click here for more images
கோலிவுட்டில் தொடர்ந்து மலைக்கோட்டை முதலிடத்தில் இருக்கிறது.

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் தீபாவளி திரை விருந்து ரசிகர்களுக்கு பரிமாறப்படவுள்ளது.

இந் நிலையில் விஷால் நடிப்பில் வெளியான மலைக்கோட்டை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியான இந்த அதிரடி ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த கலக்கல் படம், விஷால், ஆசிஷ் வித்யார்த்தி, ஊர்வசி ஆகியோரின் அமர்க்களமான நடிப்பால் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

2வது இடத்தில் ஜீவா நடித்த கற்றது தமிழ் உள்ளது. அறிமுக இயக்குநர் ராமின் அற்புதமான இயக்கத்தில் உருவாகியுள்ள கற்றது தமிழ், பல விதங்களிலும் ரசிகர்களைக் கவர்ந்து விட்டது. வித்தியாசமான கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் இனிய இசை, நெஞ்சைத் தொடும் வகையிலான ஜீவா உள்ளிட்டோரின் நடிப்பு ஆகியவை படத்துக்கு பக்கபலமாக உள்ளது.

அர்ஜூன், நிலா, வடிவேலுவின் கலக்கல் நடிப்பில் உருவான மருதமலை தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது. திரையிட்ட இடமெல்லாம் தொடர்ந்து நல்ல வசூலையும் வாரிக் கொண்டுள்ளது.

மூர்த்திகண்ணனின் முத்துப் படமான நாளைய பொழுதும் உன்னோடு நல்ல வரவேற்பு பெற்ற சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ப்ருத்வி, கார்த்திகாவின் அட்டகாசமான, இயல்பான நடிப்பால் ரசிகர்களுக்கு இந்தப் படம் எதிர்பாராத விருந்தமாக மாறிப் போயுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி 5வது இடத்தில் உள்ளது. 125 நாட்களைத் தாண்டியும், 5வது இடத்திற்குள் அது இருப்பதே ரஜினியின் பலத்திற்கு சரியான சான்று. வார இறுதி நாட்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

Read more about: kollywood, top5
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil