»   »  கோலிவுட் டாப் 5

கோலிவுட் டாப் 5

Subscribe to Oneindia Tamil
Click here for more images
சிவாஜிக்குப் பிறகு அழகிய தமிழ் மகன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் பாட்டுக்களில் டாப்புக்கு வந்துள்ளார்.

2 மாதங்களுக்கு முன்பு வெளியான சிவாஜி படப் பாடல்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இம்முறை விஜய்யின் அழகிய தமிழ் மகன் மூலம்.

தீபாவளிக்கு வெளியாகியுள்ள படங்களின் பாடல்களில் அழகிய தமிழ் மகன்தான் முதலிடத்தில் உள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களுமே ஹிட் ஆகியுள்ளன.

1. அழகிய தமிழ் மகன் - இசை ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகியுள்ள நிலையில், மதுரைக்குப் போகாதடி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

2. வேல் - இசை. யுவன் ஷங்கர் ராஜா. ஆலமரத்து விழுது பாடல் ஹிட் ஆகியுள்ளது. மற்ற பாடல்கள் வெகுவாக கவரவில்லை.

3. கற்றது தமிழ் - இசை. யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜாவின் குரலில் ஒலித்துள்ள பாடல் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் பாடலை கேட்பதற்கும், ராஜாவின் குரலை ரசிப்பதற்குமே ரசிகர்கள் சிலர் தியேட்டர்களுக்கு வருகிறார்களாம்.

4. பீமா - இசை. ஹாரிஸ் ஜெயராஜ். முதல் மழை பாடல் ஹிட் ஆகியுள்ளது. மற்றவை பெரிய அளவில் பேசப்படவில்லை.

5. பொல்லாதவன் - இசை. ஜி.வி.பிரகாஷ் குமார். பி.யோகியின் ரீமிக்ஸ் இசையில் உருவாகியுள்ள எங்கேயும் எப்போதும் ரசிக்க வைத்துள்ளது. மற்ற பாடல்களும் பரவாயில்லை. இருந்தாலும் கவரவில்லை..

Read more about: kollywood, rahman, songs
Please Wait while comments are loading...