twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |

    ஹீரோவை புக் செய்து விட்டு, அவர் காட்டும் இயக்குநரை ஒப்பந்தம் செய்யும் காலம் மலையேறிவிட்டது.

    சினிமாவின் வெற்றி இயக்குநர்களின் கையில்தான் உள்ளது என்பதை இப்போது உள்ள தயாரிப்பாளர்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளரை இப்போது இயக்குநர்தான் தேர்வு செய்கிறார்.இயக்குநர் கேட்பதையெல்லாம் செய்து கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னமும், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் திறமையான இயக்குநர்களை அடையாளம்கண்டு, அவர்களுக்காக கோடிகளைக் கொட்ட தயாராக இருக்கிறார்கள்.

    மணிரத்னத்தின் ஆய்த எழுத்து, பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம், கெளதமின் சென்னையில் ஒருமழைக்காலம், ஹரி இயக்கும் அருள், தரணியின் கில்லி, ஷங்கரின் அந்நியன், லிங்குசாமியின் ஜி, சரண் இயக்கும்அட்டகாசம், செல்வராகவனின் 7ஜி, ரெயின்போ காலனி, ஏ.ஆர்.முருகதாஸின் மிரட்டல் ஆகிய படங்களுக்குபலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த இயக்குநர்களின் முந்தைய படங்கள் கொடுத்த வெற்றி பலத்தில்தான் இப்போது கோலிவுட் படு உற்சாகமாகஇயங்கி வருகிறது. இவர்கள் இப்போதைய படங்களில் நடிப்பது முன்னணி ஹீரோக்கள்தான் என்றாலும், அதையும்தாண்டி இயக்குநர்களின் பலத்தில்தான் இந்தப் படங்களுக்கு சாதகமான எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.

    இவர்களுடன் கமெரிஷியல் விஷயங்களில் துளிகூட சமரசம் செய்யாமல் படத்தை இயக்கும் கமல்ஹாசன், சேரன்,தங்கர்பச்சான் ஆகியோரின் படங்களும் விநியோகஸ்தர்களுக்குத் தெம்பளிக்கும் வகையில் நல்லவிதமாகவே ஓடிவருகின்றன.

    இயக்குநர்கள் எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில் நடிகர்களும் இப்போது உள்ளனர். கதைவிவாதத்தின்போது மட்டுமே தலைநீட்டுவது, கதை பிடித்து சூட்டிங்குக்குப் போய் விட்டால், இயக்குநர் தலைகீழாகஒரு மணி நேரம் நிற்கச் சொன்னாலும் தயார் என்று நிற்கக் கிளம்பிவிடுகிறார் விக்ரம். இவரை பின்பற்றி சூர்யா,மாதவன், தனுஷ், ஜெயம் ரவி என்று ஒரு இளைஞர் பட்டாளமே இயக்குநர்களின் செல்லப்பிள்ளைகளாக வலம்வருகிறார்கள்.

    டூயட் காட்சிகளுக்கு மட்டும்தான் ஹீரோயின்கள் என்ற நிலை மாறி இப்போது கதாநாயகிகளுக்கும் படங்களில்முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஸ்னேகா, ஜோதிகா, லைலா, த்ரிஷா, சோனியா அகர்வால், அபிராமி, மீராஜாஸ்மின், சதா என்று நடிக்கத் தெரிந்த நடிகைகளுக்கும் இப்போது கோலிவுட்டில் பஞ்சமில்லை.

    முகத்தை அழகாகக் காட்ட வேண்டும் என்ற நிலை மாறி, கதைக்குத் தேவைப்பட்டால் மேக்கப் இல்லாமல்நடிக்கவும், கோரமாக மேக்கப் போட்டுக் கொள்ளவும் நடிகர், நடிகைகள் தயாராகவே உள்ளனர்.

    அதற்கேற்றவாறு ரசிகர்களின் ரசனையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நுட்பமான திரைக்கதை அமைப்புடையவிருமாண்டி, பாதி விஷயங்களை ரசிகர்களின் யூகத்திற்கு விட்டு, பாலா எடுத்த பிதாமகன், கமெர்ஷியல்விஷயங்கள் இல்லாமல் கதையை நம்பி களமிறக்கப்பட்ட சேரனின் ஆட்டோகிராஃப் ஆகிய படங்களையும்மாபெரும் வெற்றிப் படங்களாக்கியுள்ளனர்.

    இது இயக்குநர்களுக்கு புதுத் தெம்பை அளித்துள்ளது. மொத்தத்தில் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில்அடியெடுத்து வைத்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X