»   »  திரிஷா-அஜீத் கிரீடத்திற்கு யு

திரிஷா-அஜீத் கிரீடத்திற்கு யு

Subscribe to Oneindia Tamil

அஜீத், திரிஷா, ராஜ்கிரணின் அட்டகாச நடிப்பில் உருவாகியுள்ள கிரீடம் படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை வாரியம் அளித்துள்ளது.

இருப்பினும் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன, சில காட்சிகளில் வசனம் இடம் பெறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழம்பெரும் தயாரிப்பாளர், நடிகர் பாலாஜியின் நிறுவனத்தின் தயாரிப்பு கிரீடம். மலையாளத்தில் இதே பெயரில் வந்த படமே, தற்போது தமிழிலும் அதே பெயரில் உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன் விஜய்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்தவர்.

கடந்த வாரம் பிரியதர்ஷனிடம் படத்தைப் போட்டுக் காட்டினார் விஜய். அப்போது படம் குறித்த சில கருத்துக்களைத் தெரிவித்தாராம் பிரியதர்ஷன். படம் நன்றாக வந்திருப்பதாகவும் பாராட்டினாராம்.

இதையடுத்து அஜீத்துக்கு படத்தின் முதல் காப்பி ரெடியாகி விட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் பில்லா படப்பிடிப்பில் தீவிரமாக இருந்த அஜீத், படத்தைப் பார்ப்பதற்காக ஒரு நாள் சென்னைக்கு வந்து போனாராம்.

பின்னர் படம் தணிக்கை அனுப்பப்பட்டு தற்போது யு சான்றிதழை வாங்கியுள்ளது. இதுகுறித்து விஜய் கூறுகையில், படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. சில காட்சிகளில் வசனம் கட் செய்யப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகளில் வெறும் வாயசைப்பு மட்டும் இருக்கும்.

இருப்பினும் இதனால் படத்தின் கதையோட்டத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது. இது குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை. தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவைச் சொல்லும் படம்.

அஜீத்தும், ராஜ்கிரணும் மிகவும் அருமையாக நடித்துள்ளனர். கதையோடும், கேரக்டோரும் மெத்தப் பொருந்தியுள்ளனர். அஜீத்துக்கு இந்தப் படம் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும்.

ரொம்ப முக்கியமாக படத் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் படம் வெகுவாகப் பிடித்துப் போய் விட்டது என்றார் சந்தோஷமாக.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil