»   »  கந்தசாமியில் தெலுங்கு கிருஷ்ணா

கந்தசாமியில் தெலுங்கு கிருஷ்ணா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
விக்ரம், ஷ்ரியா இணையில் உருவாகும் கந்தசாமி படத்தில் முன்னாள் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிருஷ்ணா நடிக்கிறார்.

அந்தக் காலத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் கிருஷ்ணா. என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் உள்ளிட்ட ஜாம்பாவன்களுடன் போட்டி போட்டு நடித்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை வைத்திருந்தவர். இன்னும் கூட கிருஷ்ணாவுக்கு நல்ல ரசிகர் கூட்டம் அங்கு உள்ளது.

350க்கும் மேற்பட்ட படங்களில் கிருஷ்ணா நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், எடிட்டர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்தவர் கிருஷ்ணா. தற்போது இவரது மகன் மகேஷ்பாபு தெலுங்கில் குட்டி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

தமிழிலும் அவ்வப்போது தலை காட்டியுள்ளார் கிருஷ்ணா. கடைசியாக அவர் தமிழில் நடித்த படம் ராம் ராபர்ட் ரஹீம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, 1980ல் வெளியான படம் அது. அந்தப் படத்திற்குப் பிறகு கிருஷ்ணா தமிழில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்கு வருகிறார் கிருஷ்ணா. சுசி. கணேசன் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, விக்ரம் - ஷ்ரியா இணைந்து நடிக்க உருவாகும் கந்தசாமி படத்தில் கிருஷ்ணா நடிக்கிறார்.

ரூ. 45 கோடி பட்ஜெட்டில் தயாராகும் கந்தசாமியில், முக்கிய வேடத்தில் கிருஷ்ணா நடிக்கிறார். கலைப்புலி தாணுவே கிருஷ்ணாவிடம் கேரக்டர் குறித்துப் பேசி அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளாராம்.

இப்படத்தில் தனது சொந்தக் குரலிலேயே பேசி நடிக்கவும் இருக்கிறாராம் கிருஷ்ணா.

ரண்டி, ரண்டி, கிருஷ்ணாகாரு!

Read more about: kandasamy krishna

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil