»   »  குர்லின், சோனிகாவின் துள்ளல்

குர்லின், சோனிகாவின் துள்ளல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி அலை படு வேகமாக வீசிக் கொண்டிருக்கும் நிலையில், இயக்குநர் பிரவீன்காந்த் நடித்து இயக்கியுள்ள துள்ளல் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

ரஜினிகாந்த்தின் சிவாஜி வெளியாகி 2 வாரங்களைத் தாண்டி விட்ட நிலையில், தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சிவாஜியின் மாபெரும் ஹிட் மற்றும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து மற்ற படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் உள்ளன. இந்த நிலையில் சிவாஜிக்குப் பிறகு வெளியாகும் முதல் படம் என்ற பெருமை துள்ளல் படத்துக்குக் கிடைத்துள்ளது.

அஜீத், விக்ரம், தங்கர் பச்சான் என பல பெரும் தலைகளின் படங்களே இன்னும் தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை நிலவுகையில், பிரவீண் காந்த் தனது துள்ளல் படத்தைக் கொண்டு வந்திருப்பது திரையுலகினர் மத்தியில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

தனது துள்ளல் படத்தைத் திரையிட சில தியேட்டர்கள் கிடைத்ததால் சட்டுப்புட்டென்று படத்தை இன்று ரிலீஸ் செய்து விட்டார் பிரவீண் காந்த்.

ரட்சகன், ஸ்டார், ஜோடி ஆகிய படங்களை இயக்கியவர் பிரவீண் காந்த். முதல் முறையாக துள்ளல் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கல்யாணம் மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகளை அலசும் படமாம் இது.

குடும்பப் படம் என்று சொன்னாலும் இதில் குர்லின் சோப்ரா, சோனிகா ஆகியோர் கவர்ச்சி விருந்தை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

துள்ளல் நீண்ட காலமாக (கிட்டத்தட்ட 2 வருடமாக) தயாரிப்பில் இருந்து வந்த படம் இது. படம் முடிந்தும் கூட பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வந்தது. ஆரம்பத்தில் சென்சார் பிரச்சினையில் சிக்கியது.

மும்பை கவர்ச்சி குல்கந்துகள் குர்லின் சோப்ரா மற்றும் சோனிகா ஆகியோரின் அநியாய கவர்ச்சிக் காட்சிகளுக்கு சென்சார் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

பின்னர் படத்தை திரையிட முடியாத அளவுக்கு சிக்கல். இந்தப் பிரச்சினையை சமீபத்தில்தான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்த்து வைத்தது. இப்படியாக பிரச்சினைகள் நீங்கி இன்று ஒரு வழியாக படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பிரஸ் ஷோவின்ேபாது பிரவீண் காந்த் பேசுகையில், சிவாஜி சுனாமிக்குப் பிறகு திரைக்கு வரும் முதல் படம் என்ற பெருமை எனது துள்ளல் படத்துக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

துள்ளல் படத்தில் விவேக்கின் காமெடியும், தினாவின் இசையும் சிறப்பாக வந்துள்ளது. இருவருமே பேசப்படுவார்கள். சென்சார் போர்டிடம் கடுமையாக போராடி படத்துக்கு சான்றிதழ் வாங்கியுள்ளேன். ஆனால் நான் ஏன் இவ்வளவு கடுமையாக போராடினேன் என்பதை அனைவரும் படம் பார்க்கும்போது தெரிரிந்து கொள்வார்கள் என்றார்.

துள்ளல் துள்ளுமா?!?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil