»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேரன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் வரிசையில் இயக்குனர் பிரவீன் காந்த்தும் ஹீரோவாகிவிட்டார்.

ரட்சகன், ஜோடி, ஸ்டார் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்த்துக்கு திடீரென இந்த ஆசை வந்துவிட்டது.

இவர் இயக்கிய ரட்சகன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தால் சினிமாவில் இருந்தே காணாமல் போனார்தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

அதே போல பிரஷாந்தை வைத்து இவர் இயக்கிய ஸ்டார் மற்றும் ஜோடி ஆகிய இரு படங்களும்தியேட்டர்களை விட்டு ஓடி வந்து பெட்டியில் தஞ்சமடைந்து கொண்டன. இந்தப் படங்களுக்கு இசையமைத்தஏ.ஆர். ரஹ்மான், ஏற்கனவே இந்தியில் போட்ட மெட்டுக்களை இவரிடம் கொடுத்துவிட்டு லண்டன்போய்விட்டார்.

இதனால் இந்திப் பாடல்களை வைரமுத்துவை வைத்து தமிழாக்கினார். பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ஆனாலும்,படங்கள் படுதோல்வியடைந்தன.

இந் நிலையில் இவரே கதை, திரைக்கதை, வசனமும் எழுதி அடுத்த படத்தைத் தயாரிக்கிறார். அதன் பெயர்துள்ளல். இந்தப் படத்தில் முதலில் முன்னணி ஹீரோவைத் தான் போட இருந்தார்.


ஆனால், இவரது தோல்வி ரெக்கார்டை நன்கறிந்த ஹீரோக்கள் யாரும் துள்ளலில் நடிக்க முன் வரவில்லை.இதனால் மார்க்கெட் இல்லாத யாரையாவைது அல்லது புதுமுகத்தை தான் அறிமுகப்படுத்த வேண்டிய நிலை.

பார்த்தார் பிரவீன் காந்த், தானே துணிச்சலாகக் களமிறங்கி ஹீரோவாகிவிட்டார்.

அதே போல மும்பைக்குப் போய் பஞ்சாபிக் கட்டையான குர்லின் சோப்ராவைப் பிடித்து வந்திருக்கிறார்ஹீரோயினாக நடிக்க. இவர் ஏற்கனவே இரு தெலுங்குப் படங்களில் முடிந்தவரை காட்டிவிட்டு, பின்னர் இந்தியில்துக்கடா வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவர்.

இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு குறைந்தபட்சம் 2 ஹீரோயினாவது இருக்க வேண்டும் என்ற கோடம்பாக்கத்தின்புதிய பார்முலாவைப் பின்பற்றி, சோனிகா என்பவரையும் அனைதது வந்துவிட்டார். இவர் இந்தி நடன இயக்குனர்சரோஜ்கானின் உறவினர், அவரது குழுவில் குலுக்கலாட்டம் போடும் துணை நடிகை.

குர்லினுக்கும் சோனிகாவுக்கும் கவர்ச்சி காட்டாமல் நடிப்பது என்றால் ரொம்ப கஷ்டமாம். இதனால் படத்தில்புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மூணாறு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பும், பாடல் காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.தாங்காதே தாவணி தோப்பு என்ற பாடலில் குர்லினும் சோனிகாவும் பிரவீணுடன் போட்டுள்ள ஆட்டம் பல காலம்பேசப்படுமாம்.

மடமடவென படத்தை எடுத்து ஆகஸ்டில் ரிலீஸ் செய்துவிடும் மூடில் இருக்கும் பிரவீண், இப்போது செய்து வரும்காரியம், அவ்வப்போது குர்லினின் தடாலடி ஸ்டில்களை மீடியாக்களுக்கு தட்டிவிடுவது தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil