»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விடலைப் பசங்களின் குறும்புத்தனங்களை மையமாக வைத்து தயாராகி வருகிறது குறும்பு.

இளவட்டங்களின் சேட்டைகளை மட்டும் காட்டாமல், அவர்களது பெற்றோர் படும் பாடு,பெற்றோர்-குழந்தைகள் செய்து கொள்ளும் சமரசங்கள் ஆகியவற்றையும் சொல்கிறதாம் இந்தப்படம்.

படத்தின் ஹீரோ நரேஷ். இவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் ஆந்திர தேசத்து அசத்தல் அழகிதியா சர்மா. குறும்புக்காக தியா என்று சுருக்கி விட்டார்கள். இன்னொருவர் நிகிதா. இவர் பஞ்சாபிக்குதிரை.

தியா, தீயாக இருக்கிறார். கொழுக் மொழுக் கன்னங்கள், காந்த விழிகள், கட்டுக்கோப்பான கவர்ச்சிஎன பார்த்தவுடன் படக் என இதயத்தில் இன்ப வலியை ஏற்படுத்தக் கூடிய பவர்ஃபுல் கேர்ள்.

நம் ஊர் கலாஷேத்திராவில் பி.எஸ்சி முடித்துள்ள தியா, நிறைய மாடலிங்கும் செய்துள்ளார்.இதுதவிர மிஸ் சென்னை போட்டியிலும் கலந்து கொண்டு 2-வது இடத்தைப் பிடித்தவர்.குறும்புதான் இவருக்கு முதல் படம்.

பஞ்சாபி பொம்மை நிகிதாவுக்கு இது இரண்டாவது படம். முதல் படம் தெலுங்கில்தயாரிக்கப்பட்ட ஹாய். இந்தப் படத்தைத் தான் இந்திக்கார சுடு மன்னர்கள் முஜே குச் கெஹனாஹை என்ற பெயரில் எடுத்தார்கள்.

இவரும் ஒரு மாடல்தான். படத்தில் இவருக்கு சுறு சுறு பெண் கேரக்டராம். சில நேரம் பட்டாசாகப்பொரிவார், அடுத்த கனமே தென்றலாய் சாந்தமடைவார்.

இந்த கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், தனது இயல்பே இந்த கேரக்டர் மாதிரி தான்என்கிறார் நிகி.

ஹீரோ நரேஷ் நிஜமாகவே பெரிய வீட்டுப் பிள்ளை. தெலுங்கில் இவரது குடும்பம் பல படங்கைளத்தயாரித்துள்ளது. இப்போது இவரே ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக மட்டும் வருகிறார். நிகியையும், தியாவையும் கலாய்க்கிறார்.

இளமை பொங்கும் இசைக்கு யுவன் ஷங்கர் ராஜா. சரியான தீனி போட்டுள்ளார் என்கிறார்கள்.பாட்டுக்கள் அத்தனையும் இளசுகளை குறிவைத்து போடப்பட்டுள்ளதாம். ரஜினியின் அடுத்த வாரிசு படத்தில் வரும் ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவைதான்... என்ற சூப்பர்ஹிட் பாடலை, இதில்ரீமிக்ஸ் செய்து அசத்தலாக போட்டுள்ளாராம் யுவன்.

படத்தை இயக்குகிறவர் விஷ்ணுவர்தன், கதை, திரைக்கதையை ரவி பாபு பார்த்துக் கொள்கிறார்.அக்கினேனி(ஏதோ தெலுங்கு பெயராம் !) இந்திரா ஆனந்த் படத்தை தயாரிக்கிறார்.

இளசுகளை மட்டுமல்லாது அத்தனை தரப்பினரையும் கவரும் விதத்தில் குறும்பு தயாராகி வருவதாகஇயக்குனர் விஷ்ணுவர்தன் நம்பிக்கையுடன் கூறுகிறார். அதையுந்தான் பார்போம் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil