»   »  தங்கர், குஷ்பு, நட்பு

தங்கர், குஷ்பு, நட்பு

Subscribe to Oneindia Tamil

எதிரும் புதிருமாக, புலியும், எலியுமாக இருந்து வந்த தங்கர் பச்சானும், குஷ்புவும் துவேஷம் மறந்து தோழர்களாகி விட்டனராம்.

மறக்க முடியுமா அந்த நாளை. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படப்பிடிப்பு அது. நவ்யா நாயர் நடிக்க வர மாட்டேன் என்று ஸ்டிரைக் செய்கிறார். என்ன ஏது என்று விசாரிக்கிறார் தங்கர்பச்சான். தனது மேக்கப் பெண்ணுக்குரிய சம்பளத்தைக் கொடுக்கவில்லை, அதனால் நடிக்க மாட்டேன் என்கிறார் நவ்யா.

கோபமடையும் தங்கர், நவ்யாவிடம் சண்டை போடுகிறார். அத்தோடு நில்லாமல், ஹீரோயின்கள் குறித்து கோபமாக வார்த்தைகளையும் விட்டு பேட்டி கொடுக்கிறார். பிரச்சினை பற்றிக் கொள்கிறது. குஷ்பு உள்ளிட்டோர் கொந்தளிக்கிறார்கள்.

தங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ஸ்டிரைக் என்கிறது நடிகர் சங்கம். இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கரை நடிகர் சங்கத்திற்கு அழைத்து வருகிறார்கள். கொந்தளித்த குஷ்பு இடம் மறந்து, நிலை மறந்து கோபத்தில் காட்டுக்கூச்சல் போட்டு தங்கரை தாறுமாறாக திட்டித் தீர்க்கிறார்.

இந்த பிளாஷ்பேக்கை யார் மறந்தாலும் தங்கர் நிச்சயம் மறக்க மாட்டார். அதனால்தான் பெரியார் படத்தில் குஷ்பு நடிக்கும் காட்சிகளை நான் படமாக்க மாட்டேன் என்று கூறி விலகிக் கொண்டார்.

இப்படி குஷ்பு மீது தீவிர கோபத்துடன் இருந்த தங்கர், பெரியார் படத்தில் குஷ்பு நடித்த காட்சிகளைப் பார்த்து அவரின் நடிப்பை வாய் விட்டுப் பாராட்டினாராம். அத்தோடு பறந்தது கோபம். சில நிகழ்ச்சிகளில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழல் வந்தபோது, மிச்ச சொச்சம் இருந்த கோபமும் பறந்து போய் விட்டதாம். இப்போது இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டனராம்.

இந்தியாவும், சீனாவும் பாய் பாய் என்று சொல்லிக் கொண்டது போல இல்லாமல் நிரந்தரமாக நட்பு பாராட்டினால் நல்லது!

Please Wait while comments are loading...