»   »  குஷ்பு தயாரிக்க.. ஹீரோக்கள் நடிக்க ..

குஷ்பு தயாரிக்க.. ஹீரோக்கள் நடிக்க ..

Subscribe to Oneindia Tamil

கணவர் சுந்தர்.சிக்காக மட்டும் படங்கள் தயாரித்து வந்த குஷ்பு இனிமேல் பிற ஹீரோக்களையும் வைத்துப் படம் எடுக்கவுள்ளார்.

முன்னாள் கனவுக் கன்னியான குஷ்பு இப்போது தனக்குப் பொருத்தமான கேரக்டர் ரோல்களில் மட்டும் நடிக்கிறார். அத்தோடு டிவி தொடரிலும் பிசியாக உள்ளார். கூடவே சினிமா தயாரிப்பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அவனி சினி மேக்ஸ் என்ற பட நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய குஷ்பு, அந்த நிறுவனத்தின் சார்பில் கிரி, தலைநகரம், ரெண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். இந்த மூன்றும் சுந்தர்.சி.க்காக தயாரிக்கப்பட படங்கள். இதில் தலைநகரம் படத்தில் சுந்தர்.சி.தான் நாயகன்.

மூன்று படங்களுமே கையைக் கடிக்காமல் ஹிட் ஆகவே சந்தோஷப் பூரிப்பில் உள்ள குஷ்பு அடுத்தடுத்து நிறையப் படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

தலைநகரம் படத்தில் ஹீரேவாக நடித்து பிக்கப் ஆகி விடவே கையில் 5 ஹீரோ படங்களுடன் படு பிசியாகி விட்டார் சுந்தர்.சி. நடிப்புக்கு படங்கள் நிறைய வரவே இயக்கும் விருப்பத்தை 2 ஆண்டுகளுக்கு ஒத்திப் போட்டு விட்டாராம் சுந்தர்.சி.

இப்போது வீராப்பு, தீ, பெருமாள் ஆகிய மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சுந்தர்.சி. இதில் பெருமாள் படத்தில் நமீதா ஜோடியாக நடிக்கிறார். படத்தில் நமீதாவுக்கு சூப்பர் கேரக்டராம். அதாவது படம் முழுக்க புல்லட்டில் பவனி வரும் புல் புல் தாராவாக வருகிறார் நமீதா.

சுந்தர்.சி. வெளிப்படங்களில் பிசியாக இருப்பதால் அவரை வைத்துப் படம் எடுக்க முடியாத நிலை குஷ்புவுக்கு. இதனால் வேறு ஹீரோக்கள், இயக்குநர்களை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இதுகுறித்து குஷ்புவுடம் கேட்டபோது, பிற படங்களில் சுந்தர்.சி. பிசியாக உள்ளார். இந்த ஆண்டு இரு படங்களைத் தயாரிக்கத் தீர்மானித்துள்ளேன். ஆனால் இரண்டிலும் சுந்தர்.சி. கிடையாது.

சில இளம் ஹீரோக்களைப் பரிசீலித்து வருகிறோம். இப்படங்களில் நான் நடிக்கும் எண்ணம் இல்லை. பெரியார் போன்ற தரமான படங்களில் மட்டுமே நடிக்க நான் முடிவு செய்துள்ளேன். மணியம்மை கேரக்டரில் நடித்தது நான் செய்த பாக்கியம். எனது திரையுலக வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த கெளரவம்தான் மணியம்மை பாத்திரம் என்றார் குஷ்பு.

பின்னர் கற்பு, செக்ஸ் குறித்து அவரிடம் கேட்டோம். பெண்களின் கற்பு என்பது என்னிடம் கேட்டால் பெரியார் சொன்னதைத்தான் சொல்வேன். கற்பு குறித்து முன்பு நான் கூறிய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன் என்றார் குஷ்பு.

மறுபடியும் ஒரு பஞ்சாயத்துக்கு அடி போடுகிறாரா குஷ்பு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil