»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரஜினி, கமலுடன் ஜோடி போட்டு சொக்க வைத்த அம்பிகா சேச்சி, வயதைத் தொலைத்த காரணத்தால், அம்மா, மாமியா, அக்கா,அண்ணி என செகண்ட் இன்னிங்ஸை ஆடிக் கொண்டுள்ளார். இப்போது ராதா சேச்சியும் தமிழ் சினிமாவை இன்னொரு முறைகலக்க ஓடோடி வந்துள்ளார்.

மலையாள அக்கா-தங்கச்சி ஜோடிகளில் ரொம்பவும் பாப்புலராக இருந்தவர்கள் அம்பிகாவும், ராதாவும். ஒரே சமயத்தில்அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு புகுந்து விளையாடினார்கள். ஒரே படத்தில் இரண்டு பேரும் சேர்ந்தும்கலக்கினார்கள்.

காலத்தின் போக்கில் இருவரும் திருமணமாகி செட்டிலானார்கள். ராதா அமெரிக்காவுக்குப் போய் குடித்தனத்தை நடத்தினார்.ஆனால் அம்பிகா கல்யாணமான சில காலத்திலேயே வீட்டுக்காரரைப் பிரிந்து மீண்டும் நடிக்க வந்தார்.

ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புக்கே இடமில்லை என்பதால் அம்மா வேடத்திற்கு மாறினார். சின்னச் சின்ன ரோல்களில் நடித்துவரும் அம்பிகா, இடையில் டிவி நடிகர் ஒருவருடன் குடித்தனம் நடத்தினார்.ல பின்னர் அவரையும் கழற்றிவிட்டுவிட்டு, கொஞ்சகாலம் வடிவேலுவுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அம்பிகா மீண்டும் நடிக்க வந்தபோதும் ராதா சினிமா பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்து வந்தார்.தோளுக்கு மேல் வளர்ந்த இருமகள்களுடன் அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்து குடியேறினார்.


அவரது மகளும், கார்த்திக்கின் மகளும் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் அறிமுகமாகப் போவதாகக் கூட செய்திகள் வந்தன. ஆனால்இதை கார்த்திக் மறுத்தார்.

மகள் வருகிறாரோ இல்லையோ, அம்மா ராதா இப்போது நடிக்க வரப் போகிறார். பவர்ஃபுல் ரோல்களில் மட்டுமே நடிப்பேன்என்ற நிபந்தனையோடு சென்னைக்கு வந்துள்ளாராம் ராதா. இதுதவிர இன்னும் ஏகப்பட்ட நிபந்தனைகளையும் ராதா சேச்சிபோடுகிறாராம்.

சாய்ந்தரமாச்சுனா ஷூட்டிங்கை முடிச்சுடனும், துண்டு துக்கடா ரோல் தரக் கூடாது, ஹீரோயினுக்கு இணையாக பேசப்படக் கூடியவகையில் எனது கேரக்டர் இருக்க வேண்டும், யாரும் என்னை டச் பண்ணி நடிக்கக் கூடாது இப்படி நீளுகிறதாம் ராதாவின்கண்டிஷன்கள்.

இதையெல்லாம் ஏற்கக் கூடிய மன நிலையில் உள்ளவர்கள் மட்டும் ஊட்டுப் பக்கம் வாங்கோ என்று ராதா விடுத்துள்ளஅறைகூவலைக் கேள்விப்பட்ட இரு தெலுங்குத் தயாரிப்பாளர்களும், ஒரே ஒரு தமிழ்த் தயாரிப்பாளரும், ராதாவைஅணுகியுள்ளனர்.

இதில் ஒரு தெலுங்குத் தயாரிப்பாளர் ஓல்டு ஹீரோ கிருஷ்ணாவுக்கு ஜோடியா இவரு நீனு என்ற படத்தில் ராதாவைஹீரோயினாகவே புக் செய்துவிட்டார். அதே போல இன்னொரு தயாரிப்பாளர் ஹீரோ பிரபாஸ் நடிக்கும் ஒரு தெலுங்குப் படத்தில்அக்கா வேடத்தில் நடிக்க ராதாவை புக் செய்துள்ளார். இரண்டிலுமே ராதாவுக்கு நல்ல சம்பளமாம்.

அதே போல மிக நல்ல சம்பளம் தருவதாகக் கூறி தமிழ்த் தயாரிப்பாளரும் ராதாவை புக் செய்துவிட்டார். முரளி ஹீரோவாகநடிக்கும் ஒரு படத்தில் அக்காவாக நடிக்கப் போகிறார் ராதா.

Read more about: cinema, kushi, remake, telugu, vijay
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil