»   »  சிம்ரன் வழியில் லைலா

சிம்ரன் வழியில் லைலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிள்ளை பெற்று விட்டு சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள சிம்ரனைப் போல, லைலாவும் தனது குழந்தையை ஆயாவிடம் விட்டு விட்டு வெள்ளித் திரைக்கு வர ரெடியாகி வருகிறாராம்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சும்மாவா சொன்னார்கள்?. கல்யாணத்திற்குப் பின்னர் நடிக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிச் சென்ற முக்கால்வாசி நடிகைகள்

கல்யாணத்திற்குப் பிறகுதான் படு தீவீரமாக வாய்ப்புக்காக முயன்றுள்ளனர்.

பலர் கணவரையும், உறவுகளையும் கடாசி விட்டு வாய்ப்புக்காக அலையோ அலையென்று அலைந்த காட்சிகளை நாம் பார்த்துள்ளோம், பார்த்தும் வருகிறோம்.

இப்படித்தான் சிம்ரன் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானார். இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று திட்டவட்டமாக பேசினார். மூச்சு பேச்சே இல்லாமல் குடும்பம் நடத்தி ஒரே

ஆண்டில் அழகான குழந்தையையும் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. மீண்டும் நடிப்பேன் என்று அறிவித்தார். லேசாக உப்பிப் போன உடலை சீர்படுத்தி, செழுமை ஏற்றி மீண்டும் நடிக்க வந்து விட்டார்.

அவருக்கு மலையாளத்தில் ஹீரோயின் வாய்ப்பும், தமிழில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளன. அதுவும் கூட, கடுமையாக முயன்ற பிறகே இந்த வாய்ப்புகள் கிடைத்தன.

இப்போது சிம்ரன் வழியில் லைலாவும் மீண்டும் நடிப்புக் கடலில் குதிக்கவுள்ளார். கடைசியாக அஜீத்துடன் பரமசிவம் படத்தில் நடித்தார் லைலா.

படம் முடிந்த கையோடு சிம்ரனைப் போல திடீரென கல்யாணம் செய்து கொண்டு மும்பைக்குப் போனவர்தான் லைலா. அவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பக்கத்தில் இருந்து போஷித்து வரும் லைலா விரைவில் சென்னைக்கு வரவுள்ளாராம். மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரமாக இருக்கிறாராம் லைலா.

இதுகுறித்து அவர் கூறுகையில், குடும்பத் தலைவியாக எனது திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறேன். எனது மகன் டேரியனுடன் பொழுதைக் கழித்து வருகிறேன். இப்போது சினிமா

குறித்து சிந்திக்க எனக்கு நேரமே இல்லை.

ஆனால் நான் மீண்டும் நடிக்க மாட்டேன் என சொல்ல முடியாது. சில மாதங்கள் கழித்து அல்லது ஒரு வருடம் கழித்து நான் நடிப்பேன்.

திருமணமாகிச் சென்று விட்டு மீண்டும் நடிக்க வரும் நடிகைகளிடம் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் எப்படி அணுகுவார்கள் என்று எனக்கு தெரியும். எனவே இப்போதைக்கு நடிக்கும்

வாய்ப்பில்லை. ஆனால் நடிக்க மாட்டேன் என்று கூற முடியாது என்றார்.

லைலா இப்போதைக்கு நடிக்க வர மாட்டேன் என்று கூறினாலும் கூட குழந்தைக்கு ஒரு வயது ஆன பின்னர் உடம்பை டிரிம் செய்து கொண்டு மீண்டும் கோலிவுட்டுக்கு வரத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு அழகான அம்மா நடிப்புக்குத் தயாராகி வருகிறார். வரவேற்போம் வாஞ்சையோடு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil