»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குறுக்கெழுத்து என்ற படத்துக்காக தமிழுக்கு வந்தவர் லட்சுமி ராய். அந்தப் படத்தின் தயாரிப்புப்பணிகள் தாமதமாகிக் கொண்டே போக, கோடம்பாக்கத்தில் தனது மேக்-அப் மேனை களத்தில்இறக்கிவிட்டு கலக்கல் என்ற படத்தில் நடிக்க சான்ஸை பிடித்தார்.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த அதிர்ஷ்டம் தானாகவே தேடிவந்திருக்கிறது.

பெங்களூரில் டசெயின் ஆப் ஒயின் ஷாப்கள் ட(சுமார் 20 கடைகள்) நடத்தும் குடும்பம்இவருடையதாம். துட்டு பார்ட்டியான லட்சுமி ராய் சினிமாவுக்கு வந்திருப்பது மேலும் துட்டுசம்பாதிக்க மட்டுமல்ல, கொஞ்சம் பொழுது போக்கவும் தான்.

இவர் நடிக்கும் முதலிரண்டு படங்களே இன்னும் முடிவடையாத நிலையில் நடிகர் விஜய்யின் சித்திஷீலாவின் (ஷோபாவின் தங்கை) மகன் விக்ராந்த் (பலர் இவரைப் பார்த்து விஜய் என்று நினைத்துஏமாந்திருக்கிறார்களாம்) நடிக்கும் கற்க கசடறவிலும் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகிடைத்துவிட்டது.


இதில் லட்சுமிராய் தவிர தியாவும் இருக்கிறார். தியா, விக்ராந்த், லட்சுமிராயை வைத்து சமீபத்தில்போட்டோ செசன் நடத்திய படத்தின் டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் மண்டையைப் பிய்த்துக்கொள்ள நேர்ந்ததாம்.

ஏட்டிக்குப் போட்டியாய் தியாவும், லட்சுமி ராயும் ஆடைக் குறைப்பில் இறங்கிபோட்டோகிராபரையே கிறங்கடித்துவிட்டார்களாம்.

தமிழில் முதல் ரவுண்டில் கோட்டை விட்ட இடத்தை எப்படியாவது மீண்டும் பிடிக்கும் வேகத்தில்இருக்கும் தியா, ட்ரீம்ஸ் படத்தில் தனுசுடன் படு தாராளம் காட்டிக் கொண்டிருக்கிறார். அப்படியேஇந்தப் பட சான்சும் கிடைக்க மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஆனால், லட்சுமி ராயையும் இடையில் புகுத்த கோபம் கொண்ட தியா, அவரை தனது கவர்ச்சியால்கவிழ்த்திவிடும் மூடில் இருக்கிறார். ஆனால், லட்சுமி ராயும் சும்மா இல்லை. அவரும் தியாவின்போட்டியை தீவிரமாய் எடுத்துக் கொண்டு படத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறாராம்(ஸ்டில்ஸே சொல்லுதுப்பா).

ஆர்.வி. உதயகுமார் நீண்ட நாட்களுக்குப் பின் இயக்கும் இந்தப் படத்துக்கு விக்ராந்தை ரெக்கமண்ட்செய்தது விஜய் தானாம். கேரளா, ஆந்திரா, தாய்லாந்த், மலேசியா, இந்தோனேஷியா என சூட்டிங்நடக்கப் போகிறதாம்.

ஆக்ஷன் படமான இதை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

படத்தில் ஹீரோவாய் நடிக்கும் விஜய்க்கும் விக்ராந்துக்கும் உருவத்தில் மட்டும் ஒற்றுமையில்லை,செயல்பாட்டிலும் தான். விஜய்யைப் போலவே இவரும் யாரிடமும் வாயை திறக்க மறுக்கிறார்.எல்லாம் விஜய் டிரெய்னிங்கோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil