»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டைக் கலக்கி விடுவது என்ற தீர்மானத்துடன் லட்சுமிராய் என்ற கன்னடத்துக் கிளி சென்னைவந்திறங்கியுள்ளது.

படத்திற்கு ஜெய், ஜோர், அசத்தல், வின்னர், ஜெயம் என்று மங்களகரமான பெயர்களை வைத்தால், படம் ஓடிவிடும் என்ற நம்பிக்கை கோடம்பாக்கத்துக்காரர்களுக்கு உண்டு. அதே நம்பிக்கையில் தான் தனது முதல் படத்துக்குகலக்கல் என்று பெயர் வைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஆர்.பி.ஆர்.ராஜசேகர்.

இந்தப் படத்தில்தான், நாம் முதல் பாராவில் சொன்ன லட்சுமிராய் அறிமுகமாகிறார். படத்தில் இவரையும்,இயக்குநரையும் சேர்த்து பல புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கேம்பஸ் படத்தில் நடித்த கதாநாயகர்களில் ஒருவரானராஜ், இந்தப் படத்தில் முழுக் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவருக்கு லட்சுமிராய் மட்டுமின்றி, பாரதி என்ற இன்னொரு கதாநாயகியும் படத்தில் உண்டு. பாரதிசென்னையைச் சேர்ந்தவர். மாடலிங்கில் கொஞ்ச கொஞ்சமாக மேலே வந்து கொண்டிருந்தவரைப் பிடித்துகலக்கலில் கதாநாயகியாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.

படம் எப்படி என்று ராஜசேகரிடம் கேட்டால், பாரதப் பண்பாட்டிற்கும், இப்போதிருக்கும் நவநாகரிககலாச்சாரத்துக்கும் இடையே நடக்கும் போட்டிதான் கதை என்று ஒரு வரி சொல்லிவிட்டு, லட்சுமிராயின் புராணம்பாடத் தொடங்கிவிட்டார்.

லட்சுமிராய் தெலுங்கிலும், கன்னடத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். இப்போது தமிழில் கதாநாயகியாகமுன்னணியில் இருப்பவர்களுக்கு சரியான போட்டி இவர்தான். படம் வெளிவரட்டும் பாருங்கள். லட்சுமிராய்எங்கேயோ போகப் போகிறார் என்றார்.

இந்த ராஜசேகர், ஆபாவாணன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.இசையமைப்பாளராக ரஜினீஷ் என்பவர் அறிமுகமாகிறார். படத்தில் சுகன்யா, முத்துக்காளை, தேவன், பாபி,மனோபாலா, சேதுவிநாயகம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை மற்றும் திருநெல்வேலியில்நடக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil