»   »  இலங்கையிலும் சிவாஜி!

இலங்கையிலும் சிவாஜி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் சிவாஜி மேனியா, இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் அடித்துப் பிடித்துக் கொண்டு படத்தைப் பார்த்து வருகிறார்களாம்.

இலங்கையிலும் சிவாஜி அலை படு வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறதாம். தலைநகர் கொழும்பில் 7 தியேட்டர்களில் தினசரி 41 முறை படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம். அத்தனைக் காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

கொழும்பில் சிவாஜி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு திருவிழாக் கூட்டமாம். இதுகுறித்து கொழும்பில் உள்ள ராம் திலக் என்கிற செய்தியாளர் கூறுகையில், அமெரிக்க தூதரகம் முன்பு கூட இத்தனை கூட்டத்தை நான் பார்த்ததில்லை. கொழும்பில் வசிப்பவர்களில் பாதிப் பேர் தமிழர்கள் என்பதால், சிவாஜிக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துல்ளது.

நான்கு தியேட்டர் வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் வேறு எந்தப் படத்தையும் போடாமல் சிவாஜியை மட்டுமே திரையிட்டுள்ளனராம். மரடனா என்ற இடத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் ஒன்றில் தினசரி 20 காட்சிகளை ஓட்டிக் கொண்டுள்னராம். இங்கு டிக்கெட்டின் விலையும் பிரமாண்டமாகவே உள்ளது. 300 ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம்.

இனப் பிரச்சினையின் அழுத்தத்தால் தொய்ந்து போயிருக்கும் தமிழர்களுக்கு சிவாஜி 3 மணி நேர இளைப்பாறுதலை கொடுப்பதாக உள்ளதாம்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மனோகரா தியேட்டரிலும் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். இங்கு 2வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளதாம்.

திரிகோணமலையிலும், மத்திய இலங்கையில் உள்ள தியேட்டர்களிலும் கூட சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். சிவாஜி படத்தைப் பற்றி டெய்லி மிர்ரர், தி ஐலண்ட் ஆகிய இதழ்கள் வெகுவாகப் பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளன. இதை விட பெரிய படம் இனி வரப் போவதில்லை என்று டெய்லி மிரர் கூறியுள்ளது.

சிவாஜிக்கு இப்படி இலங்கையில் வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் கடுமையான எதிர்ப்பும் கூடவே கிளம்பியுள்ளது.

இலங்கையிலிருந்து நடத்தப்படும் தமிழ்நாதம் என்ற இணையதளம், சிவாஜி படத்தை தமிழர்கள் பார்க்கக் கூடாது, புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

ரஜினிகாந்த் ஒரு கன்னட வெறியர், தமிழர்களுக்கு விரோதி. எனவே ரஜினி படத்தைப் பார்க்கக் கூடாது என்று தமிழ்நாதம் கடுமையாகக் கூறியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil