»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனுமாலிக் இசை அமைக்க திணறிய ஒரு ஹிந்திப் பாடலுக்கு இசை அமைத்துக்காட்டினார் நம் இளையராஜா.

ராஜ்குமார் சந்தோஷி தயாரித்து வரும் படம் லஜ்ஜா. இந்த படத்துக்கு பாடல்களுக்குஅனு மாலிக் இசையமைக்கிறார். ஆனால், படத்துக்கு பின்னணி இசையைஇளையராஜா அமைக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு பாடல். ஹீரோயின் அனுபவிக்கும் சிரமங்கள், அவளின்சோகங்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிமயமான பாடலுக்கான இசையை அனுமாலிக்அமைத்தார்.

ஆனால், தயாரிப்பாளர் சந்தோஷிக்கு இந்த இசையில் திருப்தி கிடைக்கவில்லை.இதையடுத்து படத்துக்கு பின்னணி இசை அமைத்து வரும் இளையராஜாவை அழைத்துஇந்தப் பாடலுக்கும் இசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட இளையராஜா ஒரு மெட்டு போட உருகிப் போய்உட்கார்ந்திருந்தார் தயாரிப்பாளர். உடன் இருந்த அனு மாலிக்கும் கைதட்டிவிட்டார்.பாடலை லதா மங்கேஷ்கார் பாடினார்.

இந்த பாடல் குறித்து லதா மங்கேஷ்கர் கூறுகையில், இளையராஜாவின் இசையில் நான்பாடியுள்ள முதல் இந்தி பாடல் இதுதான். நான் இளையராஜாவின் இசையில் தமிழ்பாடல்கள் பாடி இருக்கிறேன். நான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடியடூயட் பாடல் பெரும் வெற்றி பெற்றது.

இந்த குறிப்பிட்ட பாடலை நான் பாட வேண்டும் என சந்தோஷி என்னை கேட்டுக்கொண்டிருந்தார். நான் சென்னைக்கு செல்ல இயலாத காரணத்தால் இளையராஜாமும்பைக்கு வந்து இந்த பாடலை ரெக்கார்ட் செய்தார்.

இந்த பாடலின் இசை மிக வித்தியாசமாக இருந்தது. இளையராஜா எதிர்பார்த்தஅளவுக்கு நான் நன்றாக பாடி இருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

தென்னக சினிமாவை தன் ஆர்மோனியத்தால் கட்டிப் போட்ட இளையராஜாவைவடக்கு ஏற்றுக் கொண்டதில்லை . முன்பு அவர் இசை அமைத்த சத்மா படத்தின்பாடல்களும், சமீபத்தில் வெளியான ஹே ராம் படத்தின் பாடல்களும் அங்கு ஹிட்ஆகவில்லை.

தற்போது அனுமாலிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கும் இந்த லஜ்ஜா படத்திற்கு,இளையராஜா பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

இளையராஜா இசை அமைத்து தமிழில் வெளியான தேவர் மகன் படம் இந்தியில்விராசட் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அந்த படத்திற்கு அனு மாலிக்தான் இசைஅமைத்தார். ஆனால், அவர் இளையராஜாவின் இசையையே உபயோகித்துக் கொண்டார்என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil