twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனதை விட்டு மறையாத சில்க் ஸ்மிதா... தென்னாட்டு பேரழகியின் பிறந்த நாள் ஸ்பெஷல் !

    |

    சென்னை : காந்த கண்ணழகி, தென்னாட்டு பேரழகு, என அனைத்து அழகு சொல்லுக்கும் சொந்தக்காரி சில்க் ஸ்மிதா.

    வனப்பான உடல்... எடுப்பான இடை... மொத்த அழகையும் குத்தகை எடுத்த கண்ணு, பளபளக்கும் பட்டு மேனி, ஏக்க பெருமூச்சுவிடவைத்த உதடு என இவர் அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம்.

    சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளான இன்று அவர் குறித்து ஒரு ஸ்பெஷல் ரவுண்டப்.

    பிரம்மாண்ட சொகுசு காருடன் மக்கள் செல்வன்.. விஜய்சேதுபதி வீட்டில் எத்தனை கார் இருக்கு தெரியுமா?பிரம்மாண்ட சொகுசு காருடன் மக்கள் செல்வன்.. விஜய்சேதுபதி வீட்டில் எத்தனை கார் இருக்கு தெரியுமா?

    இயற்பெயர் விஜயலட்சுமி

    இயற்பெயர் விஜயலட்சுமி

    1960ம் ஆண்டு ஆந்திரமாநிலத்தில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி, சிறுவயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இவருக்கு இருந்தது. ஆனால், குடும்பத்தின் வறுமையால், சிறுவயதில் இவருக்கு திருமணம் செய்யப்படுகிறது. மாமியார் மற்றும் கணவரால் திருமண வாழ்க்கையிலும் பல துன்பங்களை எதிர்கொண்ட சில்க், கணவரை பிரிந்த சென்னையில் கிடைத்த வேலையை செய்து வந்தார்.

    அறிமுகம்

    அறிமுகம்

    வினுசக்கரவர்த்தியின் கண்ணில் சில்க் பட, வண்டிசக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் அறிமுகம் ஆகிறார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பட்டி எங்கும் பிரபலமானார் சில்க்.

    450க்கும் மேற்பட்ட படங்களில்

    450க்கும் மேற்பட்ட படங்களில்

    ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என உச்ச நட்சத்திரங்களின் படங்களில் சில்கின் ஒரு குத்துப் பாடலாவது இடம் பெற்றே ஆக வேண்டும். அப்போதுதான் படம் ஹிட்டடிக்கும் என்பதால், 80, 90களில் சில்க் இல்லாத படங்களே இல்லை. தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து உச்சம் தொட்டார்.17 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சில்க்.

    பெண்களும் ரசிகைகள்

    பெண்களும் ரசிகைகள்

    ஒட்டுமொத்த திரை உலகையும் தனது ஒற்றை விழிப்பார்வையால் ஆட்டிப்படைத்தார் சில்க். தனது உடல் மொழியாலும்,கிளுகிளுப்பூட்டும் பார்வையாளும் ஆண்கள் கூட்டம் மட்டும் மல்ல பெண்களும் சில்கின் தீவிர ரசிகை ஆனார்கள் என்பது சில்கின் வெற்றி.

    தற்கொலை

    புகழின் உச்சியில் இருந்த போதே சொந்த பிரச்சினை காரணமாக செப்டம்பர் 23ந் தேதி 1996ம் ஆண்டு தனக்கு சொந்தமான குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    English summary
    Smitha appeared in over 450 films across five languages in a roller coaster career spanning for 17 years. Silk Smitha birthday special
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X