»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் என நானும் நினைக்கவில்லை, அவரும்நினைக்கவில்லை என ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம்நீரேற்றுபுரத்தில் இருக்கும் சக்களத்து காளி என்ற கோவிலில் பூஜை நடத்தினார்.

அதன்பின் சோட்டானிக்கரை, ஏற்றமானூர் கோவில்களுக்கு சென்று பூஜை,வழிபாடுகள் செய்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி:

பி.எஸ்சி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது பேட்டிக்காக ரஜினியைசந்திக்கச் சென்றேன். அவரிடம் சென்ற பிறகு, பேட்டிக்கான கேள்விகளைக் கேட்கஎன்னால் இயலவில்லை. எங்கள் சந்திப்பு பேட்டி என்ற நிலையிலிருந்து மாறி,இருவரின் தனிப்பட்ட சந்திப்பாக மாறி விட்டது.

இந்த சந்தர்ப்பம் எங்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அது எங்களைதிருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.

ரஜினிகாந்த் 8 வயதில் தாயை இழந்தவர். திருமணத்திற்கு பின்புதான் அவருக்குமீண்டும் தாயன்பு கிடைத்தது. நான் அவர் உணர்ச்சியையும்,. சிந்தனையும் அறிந்துசெயல்பட முயற்சிக்கிறேன். அவர் நல்லதொரு வாழ்க்கை நடத்த துணையாகஇருக்கிறேன். அது தவிர அவர் வெற்றிக்கு பின்னால் எதுவும் இல்லை. என் கடமையைசரியாக நிறைவேற்றினேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இருவர் சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கிறது. ஆன்மிகத்திலும் ஒரே மாதிரியாகவேசிந்திக்கிறோம். ரஜினி, நல்ல கணவர், நல்ல தந்தை, நல்ல சகோதரர், நல்ல நண்பர்.இதற்கெல்லாம் காரணம் அவர் ஒரு நல்ல மனிதர்.

சினிமா நடிகர்களின் குடும்ப வாழ்க்கை பிரச்சனைக்கு உரியதுதான். படப்பிடிப்புக்குசெல்லும் போது பல நாட்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டியதிருக்கும்.சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. தமிழக மக்களின் அன்புக்கு முன்னால்வாழ்க்கையில் சுதந்திரம் கிடைக்காதது இழப்பு இல்லை.

அவர் ஆன்மிக வாழ்க்கை நடத்துகிறார். அவர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என நினைக்கிறார். அதனால் அவர் வெற்றிகள் பெற்று வருகிறார். அவரைவெற்றி தோல்வி எதுவும் பாதிப்பதில்லை.

அவர் அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு தெரியாது. அவர் எதையும் திட்டமிட்டுசெய்வதில்லை. இதுவரை அவர் சந்தித்துள்ள உயர்வுகள் அவையாக, அந்தந்தநேரங்களில் வந்தவை. இனியும் வருவது வரட்டும்.

அவர் முதல்வராக வருவதற்கு தயாராகி வருகிறார் என நானும், அவரும்நினைக்கவில்லை என கூறினார்.

Read more about: allepy latha rajinikanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil