»   »  மறுபடியும் கல்யாண ராமன்

மறுபடியும் கல்யாண ராமன்

Subscribe to Oneindia Tamil
Lawrence with Vedika
கலைஞானி கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் அசத்தல் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கல்யாண ராமன் மீண்டும் அதே பெயரில் ரீமேக் ஆகவுள்ளது.

பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில், இளையராஜாவின் இன்னிசையில், கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் அசத்தல் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் ஆன படம் கல்யாணராமன்.

தெத்துப் பல்லுடன் நடித்த கமல்ஹாசனின் நடிப்பு இன்றளவும் பாராட்டப்படுகிறது. இந்தப் படத்தின் தொடர்ச்சியை, பஞ்சு அருணாச்சலம், ஜப்பானில் கல்யாண ராமன் என்ற பெயரில் எடுத்தார். அந்தப் படமும் ஹிட் ஆனது.

இப்போது கல்யாண ராமன் படத்தை ரீமேக் செய்யவுள்ளனர். இயக்குநர் விஷ்ணுவர்த்தனின் தந்தை எஸ்.ஜி.சேகர்தான் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

டான்ஸராக அறிமுகமாகி, மாஸ்டராக உயர்ந்து, வில்லனாக நடித்து, ஹீரோவாகவும் கலக்கி, இப்போது இயக்குநரும் ஆகி விட்ட லாரன்ஸ் ராகவேந்திராதான் கமல் வேடத்தில் நடிக்கப் போகிறார்.

இந்த ரீமேக் படத்தின் கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதுகிறார். இந்தக் காலத்துக்கேற்ப கேரக்டரில் வித்தியாசம் செய்து லாரன்ஸ் வித்தியாசமான முறையில் நடிக்கவுள்ளாராம்.

ஸ்ரீதேவி கேரக்டருக்கேற்ற நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர். முன்னணி நடிகைகளுக்குப் பதில் புதுமுகம் யாரேனும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

படத்தை இயக்கவிருப்பது இயக்குநர் ஏ.வெங்கடேஷ். தற்போது சிவாஜியின் பேரன் ஜூனியர் சிவாஜியை வைத்து சிங்கக்குட்டி, அர்ஜூனை வைத்து துரை ஆகிய படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் வெங்கடேஷ் அவற்றை முடித்து விட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் கல்யாண ராமனுக்கு வருகிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil