»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமர்க்களம் புகழ் லாரன்ஸ் ராகவேந்தர் நொந்து போய் உள்ளார்.

அட்டகாசமான டான்ஸால் அமர்க்களம் படத்தில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ராகவேந்தர் பாலச்சந்தரின் பார்த்தாலே பரவசம்படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தார். படம் ஊத்திக் கொண்டது.
இந்தப் படத்தில் நடித்தபோது, நீ ரஜினி மாதிரி பெயரிய லெவலுக்கு வருவேடா என்று பாலச்சந்தர் வாழ்த்தினாலும் வாழ்த்தினார்,ரஜினியை விட பெயரிய லெவலுக்கே வந்து விட்டதாக லாரன்ஸ் கனவு காணத் தொடங்கினார்.

ஆனால், நிஜம் வேறு மாதியாக இருந்தது. எந்தப் புதிய பட வாய்ப்பும் அவருக்கு வரவில்லை. இப்போதைக்கு ஹீரோவாக அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஒரே படம் ஸ்டைல் மட்டும்தான். அது கூட பார்த்தாலே.. க்கு முன் வந்த வாய்ப்பு. மேலும், அவரை ஹீரோவாக போட்டுப்படமெடுக்க எந்த தயாரிப்பாளரும் தயாரில்லை.

எனவே முன்பு போலவே ஒரு டான்ஸ், இரண்டு டான்ஸ் என ஆட்டம் போடும் நிலைக்கு வந்து விட்டார் லாரன்ஸ். ரோஜாக்கூட்டம்படத்தில் மும்தாஜுடன் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள லாரன்ஸ், ரஜினி போல எப்போ வருவேனா என்று தெந்தவர்களிடம் எல்லாம் கேட்டுபிணாத்தி எடுக்கிறாராம்.

பி.கு: பிரபுதேவாவின் குரூப்பில் ஆடிக் கொண்டிருந்தவர் லாரன்ஸ். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வந்து ஆடத்தொடங்கினார். பிரபு தேவாவுக்குப் போட்டியாக இவரை வளர்த்து விட பலர் முயன்றனர்.

அதற்குள் பார்த்தாலே பரவசம் படம் வந்து அதையும் கெடுத்து விட்டதாம். இதையும் சொல்லியும் புலம்பிக் கொண்டிருக்கிறார் லாரன்ஸ். ஓ...ஜீஸஸ் !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil