»   »  ஷோபனா மீது பெண் டாக்டர் பரபரப்பு புகார்

ஷோபனா மீது பெண் டாக்டர் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil
Shobana

சென்னை: தனது கணவரை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகவும், அவரை பார்க்க விடாமல் தடுப்பதாகவும் நடிகை ஷோபனா மீது டெல்லி அருகே உள்ள நோய்டாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாலினி என்பவர் புகார் கூறியுள்ளார். தனது கணவரை விட்டு ஷோபனா விலகா விட்டால், அவரது வீடு முன்பு குழந்தைகளுடன் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனக்குள் ஒருவன் படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் ஷோபனா. மறைந்த நடிகை நாட்டியப் பேரொளி பத்மினியின் உறவினர். சிறந்த நடனக்கலைஞரான ஷோபனா சமீப காலமாக நடிப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டார். முழுக்க முழுக்க நாட்டியத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் நெஹ்ரா என்பவருடன், ஷோபனாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. முதலில் இதை மறுத்தார் ஷோபனா. ஆனால் பிறகு கப்சிப் ஆகி விட்டார்.

சென்னையில் உள்ள ஷோபனாவின் வீட்டில்தான் ராகுலும் தற்போது தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகுலின் மனைவி ஷாலினி தனது இரு குழந்தைகள் மற்றும் தந்தையுடன் சென்னைக்கு வந்து முகாமிட்டுள்ளார். ஷோபனா, தனது கணவரைப் பறித்துக் கொண்டு விட்டதாக கண்ணீர் மல்க கூறுகிறார்.

ஷாலினி ஒரு பல் டாக்டர் ஆவார். ஷோபனாவின் செயல் குறித்து அவர் கூறுகையில், எனது கணவர் கடந்த ஒரு வருடமாக வீட்டுக்கே வருவதில்லை. எனக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஷோபனாதான் இத்தனைப் பிரச்சினைக்கும் காரணம். தற்போது எனது கணவரை தனது வீட்டுக்கே அழைத்துப் போய் விட்டார் ஷோபனா. எனது கணவரைப் பார்க்க விடாமல் தடுக்கிறார்.

தயவு செய்து எனது கணவரை ஷோபனா விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் எனது இரு குழந்தைகளுடன் அவரது வீட்டின் முன்பு மறியல் நடத்துவேன் என்று கூறியுள்ளார் ஷாலினி.

அதேசமயம், ராகுல் நெஹ்ராவின் தந்தையோ, ஷாலினி மீது குற்றம் சாட்டுகிறார். அவர் கூறுகையில், என்னை வீட்டை விட்டே வெளியேற்றியவர் ஷாலினி. என்னையும், எனது மகனையும் பிரித்தார். ஆனால் மகனுக்காக அதைப் பொறுத்துக் கொண்டேன்.

எங்கள் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகளைப் போட்டு குடும்பத்தையே சீர்குலைத்தார். இப்போது தனது கணவர் மீது பாசம் கொண்டவர் போல நாடகமாடுகிறார் என்று கூறியுள்ளார்.

அதேசமயம், நடிகை ஷோபனா தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்ற அவசியம் தனக்கு இல்லை என்றும், ஷாலினி சட்டப்படியான நடவடிக்கையை தாராளமாக மேற்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

ஷோபனா, ராகுல் நெஹ்ரா, ஷாலினி விவகாரத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil